நடுநிலைப் பள்ளி
இடைநிலைப் பள்ளி (middle school) இளையோர் உயர்நிலைப் பள்ளி, இளையோர் மேல்நிலைப் பள்ளி அல்லது கீழ்நிலைப் பள்ளி என்பது, தொடக்கப் பள்ளிக்கும் மேல்நிலைப் பள்ளிக்கும் இடையிலான கல்வி நிலையாகும்.
ஆப்கானித்தான்
[தொகு]ஆப்கானித்தானில், நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்புகள் வரை உள்ளன, இதில் 11 முதல் 14 வயது வரையிலான மாணவர்கள் பயில்கின்றனர்.
அல்சீரியா
[தொகு]அல்சீரியாவில், ஒரு நடுநிலைப் பள்ளி 4 தரங்களைக் கொண்டுள்ளது: 6 முதல் 9 வகுப்பு வரை உள்ளது. 11-14 வயதுடைய மாணவர்களைக் கொண்டுள்ளது.
ஆத்திரேலியா
[தொகு]ஆத்திரேலியாவின் எந்தப் பகுதியிலும் தனியாக நடுநிலைப் பள்ளிகள் என்பது இல்லை. மாணவர்கள் நேரடியாக ஆரம்பப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளிக்குச் (வருடங்கள் 7-12, பொதுவாக உயர்நிலைப் பள்ளி என்று குறிப்பிடப்படுகிறது) செல்கின்றனர்.[1]
ஆஸ்திரேலியாவில் நிறுவப்பட்ட முதல் நடுநிலைப் பள்ளி ஆர்மிடேலில் உள்ள ஆர்மிடேல் பள்ளியாகும்.[2]
இந்தியா
[தொகு]இந்தியாவில், நடுநிலைப் பள்ளி 6 முதல் 8 வகுப்புகளைக் கொண்டதாகும்.[3] ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மாநிலக் கல்வி வாரியம் உள்ளது. ஒவ்வொன்றும் அதன் சொந்தத் தரநிலைகளைக் கொண்டுள்ளன, அவை மத்திய வாரியங்களிலிருந்து வேறுபட்டிருக்கலாம்.[3] சில கல்வி நிறுவனங்களில், 5 முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி வழங்குவது இடைநிலைப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது.[3]
இந்தியாவின் கல்வி நிலைகள்:
- மழலைக் கல்வி- நர்சரி முதல் கே.ஜி
- துவக்கப்பள்ளி - வகுப்புகள் I முதல் V
- நடுநிலைப் பள்ளி - வகுப்புகள் VI முதல் VIII வரை
- உயர்நிலைப் பள்ளி - ஒன்பதாம் முதல் பத்தாம் வகுப்புகள்
- மேல்நிலைப் பள்ளி- XI முதல் XII வகுப்புகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shake-up puts Year 7s in high school". WA Today. 8 December 2011.
- ↑ "A SHORT HISTORY of THE ARMIDALE SCHOOL" (PDF). The Armidale School. Archived from the original (PDF) on 2013-04-08. பார்க்கப்பட்ட நாள் 2014-01-16.
- ↑ 3.0 3.1 3.2 Amaidi. "Indian Education System" (PDF). Archived from the original (PDF) on 17 June 2012. பார்க்கப்பட்ட நாள் 5 May 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- கனடா: மாகாணக் கல்வி முறைகள்
- மத்திய நிலை கல்விக்கான சங்கம் முன்பு தேசிய நடுநிலைப் பள்ளி சங்கம்.
- தேசிய நடுநிலைப் பள்ளிகள் மன்றம் (யுகே)
- ஆஸ்திரேலிய நடுநிலைப்பள்ளி திட்டம்