உள்ளடக்கத்துக்குச் செல்

நடப்புக் கணக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ.எம்.எஃப். தரவு அடிப்படையில் ஒட்டுமொத்த நடப்புக் கணக்கு இருப்பு 1980-2008 (யூ.எஸ்$ பில்லியன்கள்)

பொருளாதாரத்தில் செலுத்தல் இருப்புநிலையில் இரண்டு அடிப்படை கூறுகளில் நடப்புக் கணக்கும் (Current account) ஒன்றாகும். மற்றொன்று மூலத்தனக் கணக்காகும். இது வணிக இருப்புநிலைக் குறிப்பு (பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியிலிருந்து இறக்குமதியில் கழித்தல்), நிகர காரணி வருவாய் (வட்டி மற்றும் ஈவுத்தொகைப் போன்றவை) மற்றும் நிகர பணமாற்று கட்டணங்கள் (அயல்நாட்டு உதவி போன்றவை) ஆகியவைகளின் கூட்டாகும்.

நடப்பு கணக்கு = வணிக இருப்புநிலைக்குறிப்பு + அயல்நாட்டிலிருந்து நிகர காரணி வருவாய் + அயல்நாட்டிலிருந்து நிகர ஒருதரப்பு பணமாற்றுகள்

நடப்புக் கணக்கு இருப்பானது ஒரு நாட்டின் அயல்நாட்டு வணிகத்தின் தன்மையைக் கணக்கிடும் இரண்டு பெரிய முறைகளில் ஒன்றாகும் (மற்றொன்று நிகர மூலத்தன வெளியீடாகும்). ஒரு நடப்புக் கணக்கு உபரியானது அதே அளவுக்கு ஒரு நாட்டின் நிகர அந்நிய சொத்துகளை அதிகரிக்கின்றது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை இதற்கு நேரெதிர் விளைவை ஏற்படுத்துகிறது. அரசாங்கம் மற்றும் தனியார் கட்டணங்கள் ஆகிய இரண்டுமே கணக்கில் சேர்க்கப்படுகின்றன. பொருட்களும் சேவைகளும் பொதுவாக நடப்புக் காலத்தில் பயன்படுத்தப்படுவதால், இது நடப்புக் கணக்கு என்று அழைக்கப்படுகிறது.[1]

ஒரு வணிக இருப்புநிலைக் குறிப்பென்பது, அனைத்து பணமாற்றங்கள், முதலீடுகள் மற்றும் மற்ற கூறுகள் கருத்தில் கொள்ளப்படாத நிலையில் ஒரு நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதிக்கும் அதன் பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசமாகும். ஒரு நாடு இறக்குமதி செய்வதை விட குறைவாக ஏற்றுமதி செய்யும் போது அதற்கு வணிக பற்றாக்குறையுள்ளது.

நேர்மறை நிகர அயல்நாட்டு விற்பனை பொதுவாக ஒரு நடப்புக் கணக்கு உபரி யை உண்டாக்குகிறது; எதிர்மறை அயல்நாட்டு விற்பனை பொதுவாக ஒரு நடப்புக் கணக்கு பற்றாக்குறை யை உண்டாக்குகிறது. ஏற்றுமதிகள் நேர்மறை நிகர விற்பனைகளை உண்டாக்குவதாலும் வணிக இருப்பானது பொதுவாக நடப்புக் கணக்கின் மிகப்பெரிய கூறாக இருப்பதாலும், ஒரு நடப்புக் கணக்கு உபரியானது பொதுவாக நேர்மறை நிகர ஏற்றுமதிகளோடு தொடர்புப்படுத்தப்படுகிறது. எனினும் ஆஸ்திரேலியா போன்ற வெளிப்படை பொருளாதாரத்தில் இது எப்போதும் நடைபெறுவது கிடையாது. இதில் சீ.ஏ.டி.யை விட வருவாய்ப் பற்றாக்குறை அதிகமாக காண்பிக்கப்படுகிறது.

நடப்புக் கணக்கின் துணைக் கணக்கான, நிகர காரணி வருவாய் அல்லது வருவாய்க் கணக்கு, பொதுவாக வருவாய்க் கட்டணங்கள் என்ற தலைப்பின் கீழ் வெளியீடுகளாகவும் வருவாய்ப் பெறுதல் களில் உள்ளீடுகளாகவும் காண்பிக்கப்படுகிறது. வருவாய் என்பது வெளிநாடுகளிலிருக்கும் முதலீடுகளிலிருந்து (குறிப்பு: முதலீடுகள் மூலத்தனக் கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன, ஆனால் முதலீடுகளிலிருந்து வரும் வருவாயானது நடப்புக் கணக்கில் பதிவு செய்யப்படுகிறது) பெறும் பணத்தை மட்டுமல்லாமல், அயல்நாடுகளில் பணிபுரிந்து வீட்டிற்கு அனுப்பும் ரெமிட்டன்ஸ் என்றழைக்கப்படும் பணத்தையும் குறிக்கின்றது. வருவாய்க் கணக்கு எதிர்மறையாக இருந்தால், நாடானது வட்டி, ஈவுத்தொகைகள், போன்றவைகளில் பெறுவதை விட அதிகமாக செலுத்திக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். உதாரணத்திற்கு, ஐக்கிய அமெரிக்காவின் நிகர வருவாயானது அடுக்கேற்ற விகிதத்தில் குறைந்துக் கொண்டு வருகிறது. இதேனென்றால், அந்த நாடு மற்ற நாணயங்களுடன் ஒப்பிடும்போது டாலருடைய விலையை, வருவாய்க் கட்டணங்களும் பெறுதல்களும் கிட்டத்திட்ட சமமாக இருக்கும் அளவுக்கு சந்தை நிர்ணயிக்க அனுமதித்திருக்கிறது.[சான்று தேவை] கனடாவின் வருவாய்க் கட்டணங்களுக்கும் பெறுதல்களுக்கும் இடையேயான வித்தியாசம் கூட அடுக்கேற்றவிகிதத்தில் குறைந்துக் கொண்டே செல்கிறது. இதேனென்றால் அதன் மத்திய வங்கியானது 1998ஆம் ஆண்டு, கனடா நாட்டு டாலரின் அந்நிய செலாவணியில் இடர்படக்கூடாதென்ற ஒரு கடுமையான திட்டத்தை அமுல்படுத்தியது.[2] வருவாய்க் கணக்கிலுள்ள பல்வேறு துணைப்பிரிவுகள் மூலத்தனக் கணக்கிலுள்ள அதேக் குறிப்பிட்ட துணைப்பிரிவுகளுடன் தொடர்புடையனவாய் இருக்கின்றன. இதேனென்றால், வருவாயானது அவ்வபோது மூலத்தனத்தில் (சொத்துகள்) உரிமைக் கொண்டாடுவது அல்லது அயல்நாட்டிலிருக்கும் எதிர்மறை மூலத்தனத்தைக் (கடன்கள்) கொண்டிருக்கிறது. மூலத்தனக் கணக்கிலிருந்து, பொருளாதார நிபுணர்களும் மத்திய வங்கிகளும் பல்வேறு வகை மூலத்தனங்களின் உட்கிடையான விளைவு விகிதங்களை நிர்னயிக்கின்றன. உதாரணத்திற்கு, ஐக்கிய அமெரிக்காவானது, வெளிநாட்டவர் ஐக்கிய அமெரிக்க மூலத்தனத்திலிருந்துப் பெறுவதைவிட மிக அதிகமான விளைவு விகிதத்தை வெளிநாட்டு மூலத்தனத்திலிருந்து பெறுகிறது.

பாரம்பரிய கட்டண இருப்புநிலைக் குறிப்பு, நடப்புக் கணக்கானது நிகர அந்நிய சொத்துகளின் வித்தியாசத்துடன் சமமாகக் காணப்படுகிறது. ஒரு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது நிகர அந்நிய சொத்துகளின் ஒரு ஒப்புமை குறைவை சுட்டிக்காட்டுகிறது.

நடப்பு கணக்கு = நிகர அந்நிய சொத்துகளின் வித்தியாசம்

நடப்புக் கணக்குப் பற்றாகுறைகளைக் குறைத்தல்

[தொகு]

ஒரு பெருமளவிலான நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைக்கும் செயல்பாட்டில் பொதுவாக ஏற்றுமதிகளை (சரக்குகள் ஒரு நாட்டிற்கு வெளியே சென்று அயல்நாடுகளை சென்றடைவது) அதிகரித்தல் அல்லது இறக்குமதிகளைக் (சரக்குகள் ஒரு அயல்நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்குள் நுழைவது) குறைத்தல் ஆகியவை உட்படும். இது பொதுவாக இறக்குமதி கட்டுபாடுகள், ஒதுக்கீடுகள் அல்லது தீர்வைகள் (இது மறைமுகமாக ஏற்றுமதிகளையும் குறைக்கக் கூடும்) அல்லது ஏற்றுமதிகளுக்கு மானியம் வழங்குதல் ஆகியவற்றை செய்வதன் மூலமாக அடையப்படுகிறது. அயல்நாட்டு நுகர்வோருக்கு ஏற்றுமதிகளை மலிவாக்குவதற்காக அந்நிய செலாவணியில் தாக்கம் ஏற்படுத்துவது மறைமுகமாக கட்டண இருப்புநிலைக் குறிப்பை உயர்த்தும். இது உள்நாட்டு நாணயத்தின் மதிப்பைக் குறைப்பதால் அடையப்படுகிறது. உள்நாட்டு வழங்குநர்களுக்கு சாதகமாக அரசாங்க செலவிடுதலை சரிசெய்தலும் திறமிக்கதாக இருக்கிறது.

அதிகம் வெளிப்படாத ஆனால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான அதிக திறமிக்க முறைகளில், தேசிய அரசாங்கத்தின் கடன் வாங்குதலைக் குறைப்பது உட்பட உள்நாட்டு சேமிப்புகளை அதிகரிக்கும் (அல்லது உள்நாட்டு கடன் வாங்குதலை குறைத்தல்) வழிகள் அடங்கும்.

பிட்ச்ஃபோர்ட் கோட்பாடு

[தொகு]

ஒரு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது எப்போதும் ஒரு பிரச்சனை கிடையாதென்பது குறிக்கப்பட வேண்டும். ஒரு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையானது தனியார் துறையால் வழிநடத்தப்பட்டிருந்தால், அதில் பிரச்சனை ஒன்றுமில்லையென்று த பிட்ச்ஃபோர்ட் கோட்பாடு கூறுகிறது. இந்த கோட்பாடு ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் உண்மையாக ஊர்ஜிதமாயிருப்பதாக சிலர் நம்புகின்றனர். இங்கு தொடர்ந்து நடப்புக் கணக்குப் பற்றாக்குறை இருந்தபோது ஆஸ்திரேலியா கடந்த 18 ஆண்டுகளாக (1991-2009) பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் காரணம் ஒரு குறிப்பிடத்தக்க வருவாய்ப் பற்றாக்குறையை உண்டாக்கும் வண்ணம் அயல்நாட்டு முதலீட்டை (கடன் பத்திரங்கள் வடிவில் சுமார் 60%) ஈர்ப்பதே என்று கருதப்படுகின்றது. மற்றவர்கள் ஆஸ்திரேலியா ஒரு பெருமளவிலான வெளிநாட்டு கடனை குவிப்பதாகவும், குறிப்பாக வட்டி விகிதங்கள் அதிகரித்தால் அது பிரச்சனைக்குரியதாக மாறக்கூடியதாகவும் வாதிடுகின்றனர். நாடானது ஒரு நிகர மூலத்தன இறக்குமதியாளர் என்பதை நடப்புக் கணக்கில் பற்றாக்குறையானது குறிக்கின்றது. வெளிநாட்டு உதவி நடப்புக் கணக்கில் ஒரு பகுதியாகும்.

கட்டண இருப்புநிலைக் குறிப்பில் இடைத்தொடர்புகள்

[தொகு]

அதிகாரப்பூர்வ காப்புகளிலுள்ள மாற்றங்களையல்லாமல் நடப்புக் கணக்கானது மூலத்தன மற்றும் நிதியியல் கணக்குகளின் கூட்டின் ஆடிபிம்பமாக இருக்கின்றது. நடப்புக் கணக்கானது மூலத்தன மற்றும் நிதியியல் கணக்குகளால் வழிநடத்தப்படுகிறதா அல்லது இதற்கு நேரெதிர் மாறாக நடக்கிறதா என்ற கேள்வி எழலாம். பொதுவான பதில் என்னவென்றால் நடப்புக் கணக்கே முக்கிய காரணியாக திகழ்கிறது. மூலத்தன மற்றும் நிதியியல் கணக்குகள் வெறுமனே ஒரு பற்றாக்குறையை அடைத்தல் அல்லது ஒரு உபரியின் காரணமாக நிதிகளின் முதலீடு ஆகியவற்றை மட்டுமே பிரதிபலிக்கின்றது. எனினும், இதற்கு நேர்மாறான காரணித் தொடர்பு சில சூழல்களின் முக்கியமடையலாமென்று சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து வழங்கியுள்ளனர். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரீதியில் ஐக்கிய அமெரிக்காவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையானது அமெரிக்க சொத்துகளைப் பெற விழையும் சர்வதேசிய முதலீட்டாளர்களின் விருப்பத்தால் வழிநடத்தப்படுகிறதென்ற கருத்து வழங்கப்பட்டுள்ளது. (கீழே பென் பெர்னாங்க், வில்லியம் பூல் தொடர்புகளை காணவும்). எனினும், நடப்புக் கணக்கே முக்கியக் காரணியாகவும், நேர்மறை நிதியியல் கணக்கானது நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு நிதியளிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதிபலிப்பதிலும் எவ்வித இருவேறு கருத்துகளும் இல்லையென்பது விளங்கிவிட்டது.

ஐக்கிய அமெரிக்க கணக்குப் பற்றாக்குறைகள்

[தொகு]

1989 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்காவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைகளானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2006 ஆம் ஆண்டில் இது ஜி.டி.பியில் 7 சதவிகிதத்தை அடைந்துவிட்டது. இது தர்க்க மற்றும் கொள்கை வட்டாரங்களில் பெருத்த கரிசனைகளை எழுப்பியுள்ளது. என்றாலும் ஐக்கிய அமெரிக்க நடப்புக் கணக்குப் பற்றாக்குறைகளானது நேர்மறை மதிப்பீட்டு விளைவுகளால் குறைக்கப்பட்டு வருகின்றனவென்று புதிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.[3] அதாவது, அயல்நாட்டிலிருக்கும் ஐக்கிய அமெரிக்க சொத்துகளின் மதிப்பு, அயல்நாட்டு முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் உள்நாட்டு சொத்துகளைவிட அதிகரித்துக் கொண்டுவருகிறது. இதனால், ஐக்கிய அமெரிக்க நிகர அந்நிய சொத்துகள் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைகளுடன் ஒன்றுக்கொன்ரு மதிப்பில் குறையவில்லை. என்றாலும் மிக அண்மையிலான அனுபவம் இந்த நேர்மறை மதிப்பீட்டு விளைவை மாற்றியுள்ளது. இதேனென்றால், 2008 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நிகர அந்நிய சொத்து நிலைவரமானது இரண்டு டிரில்லியன் டாலர்களை விட அதிகமாக சரிந்துவிட்டதே ஆகும்.[4] உள்நாட்டவர் வைத்திருந்த அந்நிய சொத்துகள் (பெரும்பாலும் அயல்நாட்டு சரிஒப்புகள்), வெளிநாட்டவர் வைத்திருந்த உள்ளூர் சொத்துகளை (பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்க கருவூலங்களும் பத்திரங்களும்) விட குறைவாக பணமீட்டியதே இதன் முக்கிய காரணமாகும்.

குறிப்புதவிகள்

[தொகு]
  1. Ecological Economics: Principles And Applications; Herman E. Daly, Joshua Farley; Island Press, 2003
  2. "Bank of Canada - Intervention in the Exchange Market". Archived from the original on 2010-10-30. பார்க்கப்பட்ட நாள் 2010-06-11.
  3. Current Account Sustainability and Relative Reliability
  4. "US net foreign assets". Archived from the original on 2012-02-24. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடப்புக்_கணக்கு&oldid=3559905" இலிருந்து மீள்விக்கப்பட்டது