உள்ளடக்கத்துக்குச் செல்

தேன் நிலவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிதாக திருமண பந்தத்தில் இணைந்தவர்கள், இனிமையான பொழுதுகழிப்புகளுக்காக எடுத்துக்கொள்ளும் விடுகை மற்றும் உல்லாச நிகழ்வுகள் தேன் நிலவு (honeymoon) என அழைக்கப்படும்.

வரலாறு

[தொகு]

1800 களின் இறுதி வரை, 'ஹனிமூன்' என்ற சொல் உண்மையில் திருமணத்திற்குப் பிந்தைய உல்லாசப் பயணத்தைக் குறிக்கவில்லை. திருமணத்தின் முதல் மாதத்தை மட்டுமே குறிப்பதற்கு தேனிலவு என்ற சொல் பயன்பட்டது. 1552-ஆம் ஆண்டின் ஒரு நூலில் தேன் நிலவு என்ற சொல்லானது, புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்களைக் குறிப்பதற்கும், கொச்சையான மக்கள் என்பவர்களின் பயணத்தைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சாமுவேல் ஜான்சனின் அகராதியில் திருமணத்திற்குப் பிறகு மென்மை மற்றும் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றும் இல்லாத முதல் மாதம் என்று இந்தக் காலகட்டத்தை வரையறுத்தது. இதன் உட்பொருள் என்னெவன்றால், சந்திரனுடனேயே அவர்களது நெருக்கமும் குறைந்துவிடும் என்பதுதான். இது 30 நாட்களுக்கு தேன் மூலம் தயாரிக்கப்படும் மதுவைக் குடிக்கும் பழங்கால நடைமுறையுடன் தொடர்புடையது என்ற கூற்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருமணத்துக்குப் பிந்தைய சுற்றுலாப் பயணத்திற்கு இந்தச் சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1881-ஆம் ஆண்டில் திருமணத்துக்குப் பிந்தைய சமூகத்தைத் தவிர்த்துச் செல்லும் பயண நடைமுறையானது அவசியமானது இல்லை என்றும் "குறுகிய காலத் தேனிலவு" நடைமுறைக்கு வந்துவிட்டதாகவும் ஒரு இதழ் குறிப்பிட்டிருக்கிறது. சில பெண்கள் மூன்றே நாள்கள் பயணத்துடன் திருப்தியடைகிறார்கள் என்றும் அதே இதழ் கூறியது. "முழுவதுமாக ஒரு மாதம் பயணம் மேற்கொள்வது பழைய பழக்கம்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வேகமான காலத்தில் வாழ்க்கையின் வேகமும் மிக முக்கியமானது என்று அந்த இதழ் கூறியது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_நிலவு&oldid=3311792" இலிருந்து மீள்விக்கப்பட்டது