தீப்தி ஓம்செரி பல்லா
Appearance
தீப்தி ஓம்செரி பல்லா (Deepti Omchery Bhalla) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கலைஞர் ஆவார். பாடுவதிலும் நடனத்திலும் பல்துறை திறன் கொண்டவராக தனித்தன்மையுடன் அறியப்படுகிறார்.[1] இந்த திறன்களை கர்நாடக இசைப் பாடகரான தாயார் லீலா ஓம்செரி மூலம் தீப்தி பயிற்சி பெற்றார். தீப்தி ஓம்செரி பல்லா மோகினியாட்டத்தின் முன்னணி விரிவுரையாளராக புகழ் பெற்றுள்ளார். மோகினியாட்டம் இந்திய மாநிலமான கேரளாவின் பாரம்பரிய நடன வடிவமாகும். பெண்களுக்கான தனித்துவமான இம்மோகினி ஆட்டத்தை கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மாவிடம் தீப்தி கற்றுக் கொண்டார். தில்லி பல்கலைக்கழகத்தின் இசை மற்றும் நுண்கலை பீடத்தில் கர்நாடக இசையில் தீப்தி பேராசிரியராக உள்ளார். 2007 ஆம் ஆண்டு தீப்திக்கு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.[2]
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Deepti Bhalla". music.du.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2023-04-02.
- ↑ "SNA Awardees' List". Sangeet Natak Akademi. 2016. Archived from the original on 31 March 2016. பார்க்கப்பட்ட நாள் 5 February 2016.
புற இணைப்புகள்
[தொகு]- Official website of Dr. Deepti Omcherry Bhalla பரணிடப்பட்டது 2020-01-30 at the வந்தவழி இயந்திரம்