உள்ளடக்கத்துக்குச் செல்

திமிட்ரி லிசிட்சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமிட்ரி லிசிட்சின்
Dmitry Lisitsyn
தேசியம்உருசியர்
அறியப்படுவதுசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2011)

திமிட்ரி லிசிட்சின் (Dmitry Lisitsyn) உருசியாவைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராவார். உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றிலிருந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். உருசியக் கூட்டமைப்பின் மிகப்பெரிய தீவான சக்கலின் தீவின் ஆபத்தான சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்காக 2011 ஆம் ஆண்டு லிசிட்சின்னுக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1][2][3]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

திமிட்ரி லிசிட்சின் அங்காரா ஆற்றின் அருகே டைகா காடுகளால் சூழப்பட்ட ஒரு சிறிய சைபீரிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தார்.[4] பள்ளியில், உலகின் பிற பகுதிகளில் நிகழும் சுற்றுச்சூழல் பேரழிவு பற்றி அறிந்து ஆழ்ந்த பாதிப்புக்குள்ளானார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஏதாவது செய்ய விரும்பினார். சர்வாதிகார அமைப்பில் அரசியல் நடவடிக்கைக்கு சிறிய வாய்ப்பு இருப்பதைக் கண்ட இவர் இளமையில் சோவியத் ஒன்றியத்தின் இயல்பான அன்றாட வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gill, Victoria (11 April 2011). "Goldman Prize: Zimbabwe's rhino rescuer honoured". BBC News. http://news.bbc.co.uk/earth/hi/earth_news/newsid_9451000/9451460.stm. பார்த்த நாள்: 31 May 2012. 
  2. "2011 Goldman Environmental Prize Recipients". கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது. Archived from the original on 4 June 2012. பார்க்கப்பட்ட நாள் 30 May 2012.
  3. "2011 Recipient for Asia: Dmitry Lisitsyn". கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது. Archived from the original on 12 November 2011. பார்க்கப்பட்ட நாள் 30 May 2012.
  4. "Dmitry Lisitsyn". Goldman Environmental Foundation (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிட்ரி_லிசிட்சின்&oldid=3153098" இலிருந்து மீள்விக்கப்பட்டது