திப்பெல் எண்ணெய்
திப்பெல்சு எண்ணெய் (Dippel's oil)(சில நேரங்களில் எலும்பு எண்ணெய் என்று குறிப்பிடப்படுகிறது) எலும்பினை வடிகட்டுதலின் அடிப்படையில் தயாரிக்கப்படும் நைட்ரசன் துணைப் பொருள் ஆகும்.[1] ஒரு அடர்ந்த, பிசுபிசுப்பான, தார் போன்ற திரவத்துடன் விரும்பத்தகாத வாசனையுடன் உள்ளது. இதனை ஜோகன் கொன்ராட் திப்பல் என்பவர் கண்டுபிடித்தார். இதனால் இந்த எண்ணெய் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த எண்ணெய் அலிபாடிக் சங்கிலிகளைக் கொண்டுள்ளது. நைட்ரசன் செயல்பாட்டுக் குழுக்களுடன் பைரோல்கள், பிரிடீன் மற்றும் நைட்ரைல்களுடன் பிற நைட்ரசன் சேர்மங்களைக் கொண்டுள்ளது.[1]
திப்பெல் எண்ணெய் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் வழக்கற்றுப் போய்விட்டன. இதன் முதன்மை பயன்பாடு விலங்கு மற்றும் பூச்சி விரட்டியாக இருந்தது. இது ஒரு வரையறுக்கப்பட்ட பயன்பாட்டைக் கொண்டது. வேதிப் போர் பொருளாகவும், இரண்டாம் உலகப் போரின் பாலைவனப் போர்த்தொடரிலும், எதிரிகள் தண்ணீர் குடிக்க வழியின்றி செய்ய, தண்ணீர் கிணறுகளில் கலக்கப்பட்டது. இதனால் எதிரிகள் தண்ணீர் குடிக்க இயலாது.[2][3] இந்த எண்ணெய்யினால் மரணம் இல்லை என்றாகும் ஜெனீவா நெறிமுறையின்படி இதன் பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Purevsuren, B; Avid, B; Gerelmaa, T; Davaajav, Ya; Morgan, T.J; Herod, A.A; Kandiyoti, R (May 2004). "The characterisation of tar from the pyrolysis of animal bones". Fuel 83 (7–8): 799–805. doi:10.1016/j.fuel.2003.10.011.
- ↑ UK War Cabinet (22 August 1940). "Note on Method of Dealing with Drinking Water" (PDF). THE MIDDLE EAST : DIRECTIVE TO THE COMMANDER-IN-CHIEF. Annex 1. Archived from the original (PDF) on 3 October 2009. பார்க்கப்பட்ட நாள் 20 March 2010.
- ↑ "War diary of New Zealand Engineers, Western Desert Railway". 26 May 1942.
Drew sterilising powder and other assorted poisons to adulterate our drinking water and took some to wells.