உள்ளடக்கத்துக்குச் செல்

தாந்தாமலை முருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாந்தாமலை முருகன் கோவில் என்பது கிழக்கிலங்கையில் மட்டக்களப்பின் தென் மேற்கு எல்லையில் முருக வழிபாட்டுக்கு முக்கியமிக்க மலையும் காடும் சூழ்ந்த நிலை அமைவுப் பகுதியில் காணப்படுகின்ற வரலாற்றுப் புகழ் மிக்க மலைக்கோவில் ஆகும். இது மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பட்டிப்பளைப் பிரிவில் கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இருந்து மேற்கே சுமார் 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது.[1]

பெயர்க்காரணம்[தொகு]

தாந்தாமலை கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள தான்தோன்றீச்சரம் கோவில் வைப்புத் திரவியம் உள்ள இடமாதலால் இது பொக்கிசமலை என்றும் அழைக்கப்படுகிறது.[2] தான்தோறீச்சரர் தாண்டவமாடிய இடமாதலால் இதற்குத் தாண்டவமலை என்ற சொல் பின்னர் சிதைவடைந்து தாந்தாமலை என வழங்கப்பெற்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. தங்கேஸ்வரி, க. (பெப்ரவரி 2012). "தாந்தாமலை - பழைமையும் வரலாறும்". கலைக்கேசரி: பக். 22-26. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_2012.02. 
  2. 2.0 2.1 கந்தையா, வி. சீ. (1983). மட்டக்களப்புச் சைவக்கோவில்கள். கூடல் வெளியீடு.