உள்ளடக்கத்துக்குச் செல்

தலைஞாயிறு அம்பலவாணர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைஞாயிறு அம்பலவாணர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி சாலையில் ஆலங்குடிக்குக் கிழக்கே 5 கிமீ தொலைவில் தலைஞாயிறுக்கு அடுத்து ஓரடி அம்பலம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இறைவன், இறைவி

[தொகு]

இங்குள்ள மூலவர் அம்பலவணேசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி சிவகாமசுந்தரி. கோயிலின் தீர்த்தம் சிவகங்கைத் தீர்த்தமாகும். இக்கோயிலின் தல மரமாக அரச மரம் உள்ளது.[1]

பெயர்க்காரணம்

[தொகு]

இறைவன் தன் அடியவருக்காக சிதம்பரத்தில் ஆடும் ஆனந்தத் தாண்டவத்தை இங்கே காட்டினார். ஆதலால் இவ்வூர் ஓரடி அம்பலம் என்றழைக்கப்படுகிறது. சிவராத்திரியும், நடராஜர் அபிஷேகம் சிறப்பாக இக்கோயிலில் நடைபெறுகின்றன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014