தலைக்கோல்
Appearance
தலைக்கோல் என்பது அரசன் கையில் வைத்திருக்கும் செங்கோல் போன்றதொரு கோல். சிலப்பதிகாரக் காலத்துச் சோழ வேந்தன் இதனை ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கிய மாதவிக்கு வழங்கிச் சிறப்பு செய்தான். [1] [2] இதனை வழங்கியவன் கரிகாலன் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்திரன் மகன் சயந்தன். இவன் அகத்தியர் சாபத்தால் மூங்கிலாக மாறினான். சோழன் அதனை வெட்டித் 'தலைக்கோல்' செய்துகொண்ட பின்னர் சாபத்திலிருந்து விடுதலை பெற்றான். [3]
- காண்க - பண்டைய தமிழர் விருதுகள்
அடிக்குறிப்பு
[தொகு]- ↑
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் 120
(அரங்கேற்றுக் காதை) - ↑
நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்
காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத் 160
தலைக்கோல் எய்தி
(அரங்கேற்றுக் காதை) - ↑ இவன் வரலாறு