தமிழர் சிறுபான்மையினவியல்
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
நீக்க வேண்டியதற்கான காரணம்: குறிப்பிடத்தக்கமை. மேலும் கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
சிறுபான்மை மக்கள் குழுக்களின் அடையாளம், அதிகார ஊடாடல்கள், சிறுபான்மை-பெரும்பான்மை தொடர்பாடல், சிறுபான்மை அரசியல் போன்ற விடயங்களை ஆயும் இயலை சிறுபான்மையினவியல் எனலாம். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் சிறுபான்மை இனமாகவே இருக்கின்றார்கள். தமிழர்களுடன் தொடர்புடைய அல்லது தமிழர்களை தொடர்புப்படுத்தி சிறுபான்மையியல் மேற்கொள்ளப்படும்பொழுது அதை தமிழர் சிறுபான்மையினவியல் எனலாம். தமிழர்கள் சிறுபான்மையினமாக எங்கும் இருப்பதால் இது ஒரு தமிழர்களுக்கு ஒரு முக்கிய சமூக அறிவியல் இயலாக இருக்கின்றது. ஈழத்தில் தமிழர்கள் சிறுபான்மையினமாக இருப்பதால், நிகழ்ந்த, நிகழ்கிற தமிழ்நில ஆக்கிரமிப்பும் குடிப்பரம்பலில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும் குறித்த செய்திகள் ஆவணமாக்கப்பட்டுள்ளன.[1] சிறுபான்மையினமாக உள்ள ஈழத் தமிழினப் படுகொலைகளுக்குக் காரணமான ஓர் சிங்கள இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டதும், அதற்கு உலகளவில் கண்டங்கள் (ஐநா உறுப்பினர்கள் உட்பட) எழுப்பப்பட்டதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]