தக்கியுதீன் அப்துல் வாஹித்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
தக்கியுதீன் அப்துல் வாஹித் (Thakiyudeen Abdul Wahid) ஒரு இந்திய தொழில்முனைவோர் மற்றும் விமானி ஆவார். நாட்டின் முதல் திட்டமிடப்பட்ட தனியார் விமான நிறுவனமான, (இப்போது செயல்படாத) ஈஸ்ட்-வெஸ்ட் ஏர்லைன்ஸின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவர் 1995 நவம்பர் 13 அன்று கொலை செய்யப்பட்டார்..[1][2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]வாஹித் கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஓடயம் கிராமத்தில் பிறந்தார். சாதாரண கல்விப் பின்னணி கொண்ட இவர், 9ம் வகுப்பு வரை படித்தவர்.[3][4]
தொழில்
[தொகு]வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக செல்பவர்களுக்காக மும்பையின் தாதரில் தனது சகோதரர்களுடன் பயண நிறுவனத்தில் தனது வணிக வாழ்க்கையைத் தொடங்கினார்.[5] 1992 இல் அப்போதைய இந்திய அரசாங்கம் விமானத் துறையில் மேற்கொண்ட சீர்திருத்தியதின் விளைவாக, அவர் திருவனந்தபுரத்தினை தலைமையிடமாகக் கொண்டு ஈஸ்ட்-வெஸ்ட் ஏர்லைன்ஸைத் தொடங்கினார். ஈஸ்ட்-வெஸ்ட் ஏர்லைன்ஸ் 28 பிப்ரவரி 1992 அன்று வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியது.[6]
1995 இல் அவர் இறந்த பிறகு 1996 இல் விமான நிறுவனம் அதன் செயல்பாடுகளை நிறுத்தியது.[7][8]
இறப்பு
[தொகு]மும்பையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அருகில் 1995 நவம்பர் 13 அன்று வாஹித் சுட்டுக் கொல்லப்பட்டார். [9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lakdawala's arrest may shed light on Thakiyudeen Abdul Wahid murder case". OnManorama (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ "I will return to India and face trial but after teaching Dawood a lesson: Chhota Rajan". India Today (in ஆங்கிலம்). 31 January 1996. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ "ഈസ്റ്റ് വെസ്റ്റ് എയർലൈൻസ് : ഇടവ ഗ്രാമത്തിൽനിന്ന് ആകാശം മുട്ടേ". Deshabhimani (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ "അധോലോക കുറ്റവാളി ഇജാസ് ലക്ഡാവാലയെ റിമാൻഡ് ചെയ്തു". Asianet News Network Pvt Ltd (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ "'The great survivor' Naresh Goyal throws in the towel". Moneycontrol. March 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ "ഇന്ത്യയിലെ ആദ്യ സ്വകാര്യ വിമാനക്കമ്പനിയുടമ ഒരു മലയാളി; തഖിയുദ്ദീന് വാഹിദിന്റെ വിസ്മയ കഥ". Chandrika Daily (in அமெரிக்க ஆங்கிலம்). 17 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ "Arrest of ex-aide of Dawood could shed light on aviation pioneer's murder". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ Bureau, BW Online. "Going Down Memory Lane". BW Businessworld (in ஆங்கிலம்). Archived from the original on 2022-01-20. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ "When underworld spilt blood on Mumbai streets". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-05-09. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.