உள்ளடக்கத்துக்குச் செல்

டேன்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேன்டைட்டு
Tantite
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமங்கள்
வேதி வாய்பாடுTa2O5
இனங்காணல்
மோலார் நிறை441.89 கி/மோல்
நிறம்நிரமற்றது
படிக அமைப்புமுச்சாய்வு
பிளப்புஇல்லை
மோவின் அளவுகோல் வலிமை7
மிளிர்வுவிடாப்பிடியான பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி8.55
அடர்த்தி8.45 [[கி/செ.மீ3]]
ஒளியியல் பண்புகள்ஈரச்சு
மேற்கோள்கள்[1][2]

டேன்டைட்டு (Tantite) என்பது Ta2O5. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் தாண்டலம் தனிமத்தின் ஓர் அரிய கனிமமாகும். ஒளிபுகும் தன்மையுடன் நுண்ணோக்கியளவில் நிறமற்று சமச்சீரற்று விடாப்பிடியான பளபளப்புடன் முச்சாய்வு திட்டப் படிகங்களாக இக்கனிமம் உருவாகிறது. மோவின் அளவுகோளில் இதன் கடினத்தன்மை மதிப்பு 7 என்றும் மற்றும் ஒப்படர்த்தி மதிப்பு 8.45 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. டேன்டைட்டு கனிமத்தில் 1.3% நையோபியம் ஆக்சைடு கலந்துள்ளதாக வேதியியல் பகுப்பாய்வு தெரிவிக்கிறது. உருசியாவில் உள்ள கோலா தீபகற்பத்தின் பெக்மாடைட்டு தீப்பாறைகளில் முதன்முதலாக இக்கனிமம் கண்டறியப்பட்டது. அமெரிக்காவின் புளோரன்சு மாகாணம் விசுகோன்சின்னிலும் இதேவகைப் பாறைகளில் காணப்படுகிறது. எலாபைட்டு, லெபிடோலைட்டு, சிபாடுமென், கூலும்பைட்டு, டேன்டலைட்டு, வோடுகினைட்டு மற்றும் மைக்ரோலைட்டு போன்ற கனிமங்களும் இதனுடன் கலந்து காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tantite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
  2. "Tantite Mineral Data". Webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2011-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேன்டைட்டு&oldid=2924754" இலிருந்து மீள்விக்கப்பட்டது