டெல்டா 2000
டெல்டா 2000 தொடர் Delta 2000 series | |
டெல்டா 2914 யே-8 ஏவுதல் | |
தரவுகள் | |
---|---|
இயக்கம் | எரிந்தழியும் ஏவூகல அமைப்பு |
அமைப்பு | {{{manufacturer}}} |
நாடு | ஐக்கிய அமெரிக்கா
|
ஏவு வரலாறு | |
நிலை | நிறுத்தப்பட்டது |
ஏவல் பகுதி | கான்வெரால் ஏ.வ-17 வேண்டன்பெர்க் செ.ஏ.வ-2டபிள்யூ |
மொத்த ஏவல்கள் | 44 |
வெற்றிகள் | 43 |
தோல்விகள் | 1 |
முதல் பயணம் | 19 சனவரி 1974 |
கடைசிப் பயணம் | 6 அக்டோபர் 1981 |
டெல்டா 2000 தொடர் (Delta 2000 series) என்பவை அமெரிக்காவைச் சேர்ந்த எரிந்தழியும் ஏவூகல அமைப்பு வகை ஏவூர்திகளாகும். இந்த ஏவூர்திகளைப் பயன்படுத்தி 1974 மற்றும் 1981 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் நாற்பத்தி நான்கு சுற்றுப்பாதை ஏவுதல்கள் நடைபெற்றன. டெல்டா குடும்ப வகை ஏவூர்திகளில் டெல்டா 2000 ஏவூர்தியும் ஒன்றாகும். நான்கு இலக்க எண் குறியீட்டைப் பயன்படுத்தி இவ்வகையின் மாறுபட்ட வகைகள் வேறுபடுத்தி அறியப்படுகின்றன.
டெல்டா 1000, டெல்டா 2000 மற்றும் டெல்டா 3000 தொடர் ஏவுகல அமைப்புகள் நாசாவின் அப்போலோ திட்ட ஏவூர்திகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் தேவையான அளவுக்குப் பயன்படுத்தப்பட்டன.
தோர் ஏவுகணையின் நீட்சிவடிவமான நீள் தொட்டி தோர் அமைப்பே, டெல்டா தொடரின் முதற்கட்டம் ஆகும். இவ்வடிவத்திலிருந்த தொடக்கக்கால எம்.பி-3-III பொறியானது இராக்கெட்டைன் ஆர்.எசு-27 என்ற பொறி பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது. அமெரிக்க ஏவுகல வாகனமான சாட்டன் 1பி இல் சிற்சில மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்ட எச்-1 பொறியே ஆர்.எசு-27 என்று மறு அடையாளமிடப்பட்டது. மேலேற்றும் உந்துகைச் சக்தியை அதிகரிக்கும் விதமாக திண்ம ஏவூர்தி உந்துகலங்களான காசுடர்-2 ஆற்றல் நிரப்பிகள் 3 அல்லது 9 எண்ணிக்கையில் இதனுடன் இணைக்கப்பட்டன. டெல்டா பி இரண்டாம் கட்டத்தில், அமெரிக்காவின் தி.ஆர்.டபிள்யூ நிறுவனத்தின் பொறியான தி.ஆர்.201 பொறி பயன்படுத்தப்பட்டது. நிலையான உந்துகை வெளியீட்டிற்காக கட்டமைக்கப்பட்ட நிலவுக்கூடு சரிவுப்பொறியே தி.ஆர்.201 பொறியாகும். உயர் மட்டங்கள் அடைவதை இலக்காகக் கொண்ட மூன்றுகட்ட கட்டமைப்பு தேவைப்படும் ஏவுதல்களில் தையோகால் சிடார்-37டி அல்லது 37-இ ஏவுப் பொறிகளைப் பயன்படுத்தின.
கலிபோர்னியாவிலுள்ள வேண்டன்பெர்க் வான்படைத் தளத்தில் இருக்கும் விண்கல ஏவுவளாகம் 2டபிள்யூ வில் இருந்தும் கேப்கானவெரால் ஏவு வளாகம் 17 இன் இரண்டு ஏவுதளங்களில் இருந்தும் டெல்டா 2000 ஏவுகல அமைப்பு வகைகள் ஏவப்பட்டன. ஏவப்பட்ட நாற்பத்தி நான்கு ஏவுதல்களில் நாற்பத்தி மூன்று வெற்றிகரமாக ஏவப்பட்டன. 1974 ஆம் ஆண்டு சனவரி 19 இல் ஏவப்பட்ட முதலாவது ஏவல்தான் தோல்வியில் முடிந்த ஏவுதலாகும். இம்முயற்சியில் சிகைநெட் 2ஏ என்ற செயற்கைக்கோள் ஒரு பயனற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.ஒரு மின்னணு தொகுப்பு சுற்றுப் பலகையில் ஏற்பட்ட ஒரு குறுக்குச்சுற்றால் (இரண்டாம் நிலையில்) உயர்நிலைகள் விடுவிக்கப்பட்டன. செயற்கைக்கோளும் நிலையற்ற தாழ் சுற்றுப்பாதைக்குள் (96 x 3,406 km x 37.6 பாகை) செலுத்தப்பட்டதால் அது விரைவாக சிதைவுற்றது. தொடர்ந்து மேற்கொள்லப்பட்ட விசாரனையின் முடிவில், மின்சுற்றுப் பலகையில் தரக்குறைவான பூச்சு பூசப்பட்டதுதான் காரணமென்று தெரிவிக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kyle, Ed (9 April 2010). "Delta 2000 series - Extended Long Tank Delta". Space Launch Report. பார்க்கப்பட்ட நாள் 7 June 2012.
- Wade, Mark. "Delta". Encyclopedia Astronautica. பார்க்கப்பட்ட நாள் 2009-02-15.
- Krebs, Gunter. "Thor family". Gunter's Space Page. பார்க்கப்பட்ட நாள் 2009-02-15.