நடுக்கம்
நடுக்கம் / நடுக்கங்கள் அல்லது டிக் டேக் டோ என்பது தாளில் எழுதி விளையாடக்கூடிய சிறுவர் விளையாட்டு. இதை எக்சும் ஓவும் என்றும் குறிப்பிடுவர். இந்த விளையாட்டை இருவர் மட்டுமே விளையாட முடியும். தாளில் 3 X 3 என்ற அமைப்பில் ஒன்பது கட்டங்கள் இருக்கும். ஒருவர் ’X’ என்ற குறியீட்டையும், மற்றவர் ’O’ என்ற குறியீட்டையும் பயன்படுத்த வேண்டும். குலுக்கல் முறையிலோ, காசை சுண்டியோ குறியீடுகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒருவர் தம் குறியீட்டை ஏதாவது ஒரு கட்டத்தில் எழுத வேண்டும். மற்றவரும் அதைத் தவிர்த்த மற்றொரு கட்டத்தில் தம் குறியீட்டை எழுத வேண்டும். இவ்வாறு ஆட்டம் தொடரும். அடுத்தடுத்த மூன்று கட்டங்களில் தம் குறியீடு வருமாறு சிந்தித்து எழுத வேண்டும். எவரின் குறியீடு அடுத்தடுத்து உள்ள மூன்று கட்டங்களில் நேர்வாக்கிலோ, குறுக்குவாக்கிலோ இருக்கிறதோ அவர் வென்றவர் ஆவார். எல்லா கட்டங்களிலும் எழுதி முடித்த பின்னரும், இருவருக்குமே நேராகவோ, குறுக்குவாக்கிலோ அடுத்தடுத்த மூன்று கட்டங்களில் குறியீடு அமையாவிடில், ஆட்டம் சமநிலையில் முடியும். அதிகபட்சமாக ஒருவர் ஐந்து கட்டங்களில் மட்டுமே எழுத முடியும். மொத்தமே ஒன்பது கட்டங்கள் என்பதால் ஓரிரு நிமிடங்களில் ஆட்டத்தை முடிக்கலாம்.
சான்றுகள்
[தொகு]இணைப்புகள்
[தொகு]- Wolfram's MathWorld
- விளையாட்டின் இணையதளம் பரணிடப்பட்டது 2014-04-07 at the வந்தவழி இயந்திரம்