உள்ளடக்கத்துக்குச் செல்

டாம்பா விரிகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாம்பா விாிகுடா

டாம்பா விரிகுடா என்பது வட அமெரிக்காவில் உள்ள ஒரு விரிகுடா ஆகும். இது மெக்சிகோ வளைகுடாவின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் மேற்கு புளோரிடா வரை பரவியுள்ளது. இவ்விரிகுடா 27.45° வடக்கு, 82.35° மேற்கில் அமைந்துள்ளது. இது 40 கி.மீ. நீளத்தையும் 7.12 மீ. அகலத்தையும் கொண்டுள்ளது. பினெல்லாஸ் முந்நீரகத்தால் இவ்விரிகுடாவின் ஒரு பகுதி மேற்கில் தனியாக உள்ளது. மற்றொரு நிலப்பகுதி தெற்காக இவ்விரிகுடாவின் நடுப்பகுதி வரை சென்று மேற்கில் பழைய டாம்பா விரிகுடாவும் கிழக்கில் ஹில்ஸ்ப்ரோ விரிகுடாவும் உருவாகக் காரணமாகிறது. இவ்விரிகுடா மேற்கில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கும், வடகிழக்காக அமைந்துள்ள டாம்பா நகருக்கும் உல்லாச இடமாகவும், வணிக இடமாகவும் விளங்குகிறது.

பண்பிலோ தே நோர்வேஸ் 1528 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவ்விரிகுடாவைக் கண்டுபிடித்தார். ஹெர்மண்டோ தே சோடா என்னும் ஸ்பெயின் நாட்டுத் தோட்ட வல்லுநர் 1539 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் இவ்விரிகுடாவுக்கு வந்த பின் அமெரிக்க தென் கிழக்குப் பகுதி வழியாக பயணம் செய்தார்.[1]

மேற்கோள்

[தொகு]
  1. அறிவியல் களஞ்சியம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தொகுதி 11
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாம்பா_விரிகுடா&oldid=3695033" இலிருந்து மீள்விக்கப்பட்டது