டங்ஸ்டன் எஃகு
டங்ஸ்டன் எஃகு என்பது டங்ஸ்டனை அதன் கலப்புலோக இயைபில் ஒன்றாகக் கொண்டிருக்கும் எஃகு ஆகும். இவ்வாறான கலப்புலோகமானது பெரும்பாலும் இந்த தனிமத்தின் முன்னிலையிலிருந்து பெறப்பட்ட பண்புகளைக் (கலப்புலோகத்தில் உள்ள வேறு எந்த ஒரு தனிமத்தை விடவும்) கொண்டுள்ளது. பொதுவான உலோகக்கலவைகள் எடையால் 2% முதல் 18% டங்ஸ்டனையும் சிறிய அளவிலான மாலிப்டினம் மற்றும் வனேடியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளன. இவ்வகையான கலப்புலோகங்கள் குறிப்பிடத்தக்க அளவு வெப்பம், அரிமானம் மற்றும் குறைவான தேய்மானம் கொண்டதாக இருக்கின்றன. எஃகு கலப்புலோகத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மிகப் பழமையான தனிமக்கூறுகளில் டங்ஸ்டனும் ஒன்றாகும். இது மிகவும் கடினமான கார்பைடு மற்றும் இரும்பு டங்ஸ்டைட்டை உருவாக்குகிறது . இருப்பினும், அதிக அளவிலான டங்ஸ்டன் உள்ளடக்கமானது உடையக்கூடிய தன்மையை ஏற்படுத்துகிறது. வளையக்கூடிய தன்மைக்குப் பதிலாக உடையும் தன்மையை உண்டாக்குகிறது.[1] அனைத்து டங்ஸ்டன் எஃகுகளுக்கான SAE குறியீடு 7XXX வடிவத்தில் 7 என்ற எண்ணிலிருந்து தொடங்கி நான்கு எண்களைக் கொண்டுள்ளது.
மீ நுண் துளை உளிகள், நீண்ட ஆயுள் உடைய சுய-கூர்மைப்படுத்தும், சுழலும் வெட்டும் கத்திகள் மற்றும் ஏவுகலன் பொறி முனைகள் போன்ற பல பயன்பாடுகளுக்கு டங்ஸ்டன் எஃகு பயன்படுத்தப்படுகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Mel Schwartz (2002-04-29). Encyclopedia of Materials, Parts and Finishes, Second Edition. CRC Press.