ஜெஹ்ரா அலி யவர் ஜங்
ஜெஹ்ரா அலி யவர் ஜங் | |
---|---|
கைரோவில் அப்தல் நாசர் அளித்த விருந்தில் ஜெஹ்ரா அலி யவர் ஜங் கலந்துகொண்டார். | |
பிறப்பு | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | சமூக சேவகர் |
அறியப்படுவது | சமூக சேவகர் |
வாழ்க்கைத் துணை | அலி யவர் ஜங் |
பிள்ளைகள் | பில்கிஸ் ஐ. லத்திப் |
உறவினர்கள் | இத்ரீஸ் ஹசன் லத்திப் (மருமகன்) |
விருதுகள் | பத்ம பூஷன் |
ஜஹ்ரா அலி யவர் ஜங் ஓர் இந்திய சமூக சேவகர் மற்றும் மும்பை சேரிவாசிகளின் நலனுக்காக செயல்படும் அரசு சாரா அமைப்பான "சொசைட்டி ஃபார் கிளீன் சிட்டிஸ் " நிறுவனர் ஆவார். இவர் அலி யவர் ஜங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரின் கணவர் மகாராஸ்டிரா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் ஆவார். [1]
ஜஹ்ரா பாந்த்ராவில் ஒரு குழந்தைகள் இல்லத்தை நடத்துகின்ற ஒரு சமூக அமைப்பான "நேஷனல் சொசைட்டி ஃபார் கிளீன் சிட்டி" என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைைகளை இல்லத்தில் தங்க வைத்து , அவர்களின் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவ, தொழில், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நலன் ஆகியவை கவனிக்கப்படுகின்றன. [2] [3] இவர் இந்த அமைப்பின் தலைவராக பணியாற்றுகிறார். [4] சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1973 ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் இந்திய அரசு இவருக்கு வழங்கியது. [5]
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "I do not know what sort of a governor Mr. C. Subramaniam will be". Busybee Forever. 2 February 1990. Archived from the original on 20 August 2016. பார்க்கப்பட்ட நாள் July 18, 2016.
- ↑ "National Society for Clean Cities". Vibha. 2016. பார்க்கப்பட்ட நாள் July 18, 2016.
- ↑ "Reverse migration process, urges governor". Times of India. 30 December 2001. பார்க்கப்பட்ட நாள் July 18, 2016.
- ↑ "Sunderlal Bahuguna". Times Cintent. 1 March 1987. பார்க்கப்பட்ட நாள் July 18, 2016.
- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் January 3, 2016.