ஜான் ரத்தினம்
Appearance
ஜான் ரத்தினம் (John Rathinam) என்பவர் 1885 ஆம் ஆண்டு அயோத்தி தாசருடன் இணைந்து திராவிட பாண்டியன் என்ற இதழை நிறுவியவர் ஆவார். இவ்விதழானது சென்னையில் இருந்த தீண்டத்தகாதவர்களின் துன்பங்களில் கவனம் செலுத்துகிற வகையில் நிறுவப்பட்டது. [1] [2]1885 ஆம் ஆண்டு பேராயர் ஜான் ரத்தினம், பண்டிதர் அயோத்தி தாசருடன் இணைந்து திராவிடர் கழகம் என்ற ஆதி திராவிடர்களுக்கான அமைப்பையும் உருவாக்கினார்.[3]
ஜான் ரத்தினம் | |
---|---|
பணி | எழுத்தாளர் |
அறியப்படுவது | திராவிடர் கழகத்தை நிறுவியவர்.[4] தீண்டாமை ஒழிப்பு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | திராவிட பாண்டியன் என்ற இதழை நிறுவியர்[5] |
மாலை நேரப் பள்ளிகள்
[தொகு]ஜான் ரத்தினம் உருவாக்கிய திராவிட கழகம் சென்னையில் சிறிய அளவில் மாலை நேரப் பள்ளிகளை நடத்தி வந்தது. பிறகு அவர் ராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த அமைப்பின் பணிகள் படிப்படியாக நின்று போனது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Raj Sekhar Basu (14 February 2011). Nandanar's Children: The Paraiyans' Tryst with Destiny, Tamil Nadu 1850 - 1956. SAGE Publications. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788132105145.
- ↑ Anand Teltumbde (19 August 2016). Dalits: Past, present and future. Taylor & Francis. p. 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781315526447.
- ↑ hindutamil
- ↑ hindutamil
- ↑ hindutamil
- ↑ https://www.vikatan.com/government-and-politics/iyodhee-thass-pandithar-a-pioneer-of-the-dravidian-movement-and-literature