சோனியன் காடு
சோனியன் காடு (Sonian Forest) [1] (டச்சு: Zoniënwoud, பிரெஞ்சு மொழி: Forêt de Soignes) எனப்படுவது பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரத்தின் தென்-கிழக்கு விளிம்பில் காணப்படும் 4,421-எக்டேர் (10,920-ஏக்கர்) பரப்பளவு கொண்ட ஒரு காடு ஆகும்.
இக்காடு, பெல்சியத்தின் பல்வே பிரதேசங்களுள் பரந்துள்ளது. பிளெமியப் பகுதிகளான யூக்கிளைச் சேர்ந்த சின்ட்-ஜெனெசியசு-ரோட், ஊவீலார்ட், ஓவரைசே, பிரசல்சு தலைநகரப் பகுதியைச் சேர்ந்த வாட்டர்மீல்-பொயிசுபோ, ஓடர்கெம், வுலூவ் - செயின்ட்-பியர், ஆகிய மாநகரப் பகுதிகளுக்குள்ளும், வலூன் நகரங்களான லா ஊப்பே, வாட்டர் லூ ஆகியவற்றின் எல்லைகளுக்குள்ளும் அடங்கியுள்ளது.
சோனியன் காட்டின் 56% பிளான்டர்சாலும், 38% பிரசெல்சு தலைநகரப் பகுதியாலும், 6% வலோனியாவாலும் பேணப்பட்டு வருகிறது. ரோயல் நம்பிக்கை நிதியத்துக்குச் சொந்தமான தனியாருக்குச் சொந்தமான பகுதியும் இதற்குள் அடங்கியுள்ளது.
வரலாறு
[தொகு]இந்தக் காடு சில்வா கார்போனியா அல்லது கரிக் காடு என அழைக்கப்பட்ட பண்டைய காட்டின் எஞ்சியுள்ள துண்டுகளின் ஒரு பகுதியாகும். மத்திய காலத்தின் தொடக்க காலத்திலிருந்து இக் காடு பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அக்காலத்தில், பிரசெசுக்குத் தெற்கே இக்காடு சென ஆற்றைக் கடந்து எயினோ வரை பரந்திருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Also known as the forest or wood of Soignies, and if derived from வாலோன் மொழி the forest or wood of Soignes.