சோகோலேட்லைட்டு
Appearance
சோகோலேட்லைட்டு Xocolatlite | |
---|---|
மெக்சிகோவின் சோனோரோ மாநிலத்தின் மோக்டிசுமா நகரின் சுரங்கம் | |
பொதுவானாவை | |
வகை | சல்பேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Ca2Mn4+2(Te6+O6)2 • H2O |
இனங்காணல் | |
மோலார் நிறை | 655.24 கி/மோல் |
நிறம் | சாக்கலேட்டு பழுப்பு |
படிக இயல்பு | தகடு போன்ற கனிமம் |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
முறிவு | சங்குப் பிளவு |
மோவின் அளவுகோல் வலிமை | 2-3 |
மிளிர்வு | கண்ணாடி பளபளப்பு |
கீற்றுவண்ணம் | தாமிரப் பழுப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒப்படர்த்தி | 4.10 கி/கன.செ.மீ |
அடர்த்தி | 4.1 கி/கன.செ.மீ |
மேற்கோள்கள் | [1][2] |
சோகோலேட்லைட்டு (Xocolatlite) என்பது Ca2Mn4+2(Te6+O6)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு சல்பேட்டுக் கனிமம் ஆகும். சாக்லேட்டு போன்ற தோற்றத்தை அளிப்பதால் இக்கனிமத்திற்கு அப்பெயர் சூட்டப்பட்டது. மெக்சிகோ நாட்டிலுள்ள சோனோரோ மாநிலத்தின் மோக்டிசுமா நகரின் லா பாம்போலா தங்கச் சுரங்கத்தில் சோகோலேட்லைட்டு கண்டறியப்பட்டது. அமெரிக்க பழங்குடியினர் மொழியான நாகுவால் மொழியியில் சோகோலேட் என்பது கொக்கோ விதை, நீர், மிளகாய்ப் பொடி ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். இலக்கிய வழக்கத்தில் இதற்கு கசப்பு நீர் என்ற பொருள் தரப்படுகிறது. மேலும் இது சாக்லேட்டு என்ற சொல்லுக்குரிய வேர் சொல்லாகவும் கருதப்படுகிறது.