சேனேப்பி
Appearance
உருவாக்குனர் | Canonical Ltd. |
---|---|
தொடக்க வெளியீடு | 9 திசம்பர் 2014[1] |
அண்மை வெளியீடு | 2.30 / 18 திசம்பர் 2017 |
மொழி | Python, Go |
இயக்கு முறைமை | லினக்சு |
உரிமம் | GPLv3 |
இணையத்தளம் | snapcraft |
சேனேப்பி(Snappy) என்பது பொதிய மேலக வகைகளில் ஒன்றாகும். கனோனிக்கல் நிறுவனத்தின், உபுண்டு அலைபேசி இயக்குதளத்திற்காக இது வடிவமைக்கப்பட்டது. இதன் வழியே மென்பொருட்களை ஈடுபடுத்துதலுக்கும், பொதிய மேலக மென்பொருட்களை மேலாண்மை செய்யவும் இது உருவாக்கப்பட்டது. இதன் பொதியங்களே, 'சேனேப்பிசு'(snaps) என்றும், இதற்குரிய கருவிக்கு 'சேனேப்டு'(snapd) என்றும் அழைக்கப்படுகின்றன. இவைகளின் துணைக் கொண்டு எண்ணற்ற லினக்சு வழங்கல்களில் நிறுவி பயன்படுத்தலாம். பலவகையான லினக்சு, உபுண்டு வழங்களின் மிசைப்பதிப்பு, வழங்கிப்பதிப்பு, மேகமைப்பதிப்பு பயன்படுத்தினாலும், ஒவ்வொன்றிலும் நிறுவும் முறை வேறுபாடுகள் உடையதாகத் திகழ்கின்றன.[2]