உள்ளடக்கத்துக்குச் செல்

சூழற்புத்தாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூழற்புத்தாக்கம் (Eco-innovation) என்பது, பேண்தகுநிலை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யும் உற்பத்திப் பொருட்களினதும், வழிமுறைகளினதும் புத்தாக்கத்தைக் குறிக்கும். இது, நேரடியாகவோ மறைமுகமாகவோ சூழலியல் மேம்பாட்டுக்கு உதவுவதற்காக அறிவை வணிகத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது ஆகும். இது, சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது முதல் சமூகம் ஏற்கக்கூடிய பேண்தகுநிலையை அடைவதற்கான புத்தாக்கம் சார் வழிமுறைகள் வரை சூழலியல் தொடர்பான பலவிதமான எண்ணக்கருக்களை உள்ளடக்குகிறது.[1][2][3]

சூழற்புத்தாக்கக் கருத்துருவின் தோற்றம்

[தொகு]

சூழற்புத்தாக்கம் என்னும் எண்ணக்கரு அண்மைக் காலத்தது ஆகும். குளோட் பசுலரும், பீட்டர் யேம்சும் எழுதிய நூலொன்று (1996) இது குறித்து முதலில் குறிப்பிட்ட நூல்களுள் ஒன்றாகும். இடற்குப் பின்னர் பீட்டர் யேம்சு எழுதிய கட்டுரையில் சூழற்புத்தாக்கம் என்பதன் வரைவிலக்கணத்தை வெளியிட்டார். இதன்படி, சூழற்புத்தாக்கம் என்பதை "வாடிக்கையாளருக்கும், வணிகருக்கும் பெறுமதியைக் கொடுப்பதோடு சூழலுக்கும் குறிப்பிடத்தக்க அளவு குறைவான தாக்கத்தைக் கொடுக்கும் புதிய பொருட்களும் வழிமுறைகளும் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Díaz-García, Cristina; González-Moreno, Ángela; Sáez-Martínez, Francisco J. (2015). "Eco-innovation: insights from a literature review". Innovation: Management, Policy & Practice 17 (1): 6–23. doi:10.1080/14479338.2015.1011060. 
  2. Fussler, C. & P. James, 1996; Driving Eco-Innovation: A Breakthrough Discipline for Innovation and Sustainability, Pitman Publishing: London, 364 p.
  3. James, P., 1997; 'The Sustainability Circle: a new tool for product development and design', Journal of Sustainable Product Design 2: 52:57, http://www.cfsd.org.uk/journal
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழற்புத்தாக்கம்&oldid=4099063" இலிருந்து மீள்விக்கப்பட்டது