உள்ளடக்கத்துக்குச் செல்

சுவானைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவானைட்டு
Suanite
பொதுவானாவை
வகைபோரேட்டு கனிமம்
வேதி வாய்பாடுMg2B2O5
இனங்காணல்
நிறம்வெண்மையும் வெளிர் சாம்பலும்
படிக இயல்புபட்டகத்தன்மை கொண்ட இழைபடிகங்களின் தொகுதிகள்
படிக அமைப்புஒற்றைச் சரிவச்சு
பிளப்பு{010} இல் சரியான இணைப் பிளவு
மோவின் அளவுகோல் வலிமை5.5
மிளிர்வுமுத்து மற்றும் பட்டு போன்றது
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி2.91
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (–)
ஒளிவிலகல் எண்nα = 1.596 nβ = 1.639 nγ = 1.670
இரட்டை ஒளிவிலகல்δ = 0.074
2V கோணம்70°
மேற்கோள்கள்[1][2][3]

சுவானைட்டு (Suanite) என்பது Mg2B2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியம் போரேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.

டோக்கியோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சப்பானிய விஞ்ஞானி டேக்கியோ.வாட்டனேப்பு 1953 ஆம் ஆண்டு இக்கனிமத்தைக் கண்டுபிடித்தார்[4]. 1939 ஆம் ஆண்டு வட கொரியாவில் உள்ள ஆல் கொல் சுரங்கத்திலிருந்து வரப்பெற்ற தங்கம் மற்றும் தாமிரம் தனிமங்களைக் கொண்ட தாதுப்பொருட்களை ஆய்வு செய்யும்போது இவருக்கு கனிமத்துடனான முதல் தொடர்பு ஏற்பட்டது. கிடைத்த கனிமத்தின் மாதிரி சிறிய அளவாக இருந்ததால் அவரால் அந்த அறியப்படாத பொருளின் ஒளியியல் பண்புகளை மட்டுமே நுண்ணோக்கியின் உதவியால் தீர்மானிக்க முடிந்தது. பின்னர் 1943 ஆம் ஆண்டில் வாட்டனேபுக்கு கூடுதலாக கனிம மாதிரிகள் கிடைக்கப்பெற்றதால் இக்கனிமத்தைப் பற்றிய வேதியியல் பகுப்பாய்வுகளை தொடர முடிந்தது[4].

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவானைட்டு&oldid=2590690" இலிருந்து மீள்விக்கப்பட்டது