உள்ளடக்கத்துக்குச் செல்

சுவரூப் நாயக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவரூப் நாயக்கு
பிறப்பு(1947-02-08)8 பெப்ரவரி 1947
கட்டக், ஒடிசா
இறப்பு27 அக்டோபர் 2023(2023-10-27) (அகவை 76)
கட்டக், ஒடிசா
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுஇசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர்
வாழ்க்கைத்
துணை
நிகாரிகா சாகூ
உறவினர்கள்சாரதா பிரசன்னா நாயக்கு (சகோதரர்)
பார்வதி கோசு (சகோதரி)
விருதுகள்ஒடிசா மாநில திரைப்பட விருதுகள்

சுவரூப் நாயக்கு (Swarup Nayak) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இசைக்கலைஞராவார். இசைக்கலைஞர், பாடலாசிரியர், திரைப் பாடகர் மற்றும் நடிகர் என பன்முகத் திறனுடன் இவர் செயற்பட்டார். 1962 ஆம் ஆண்டில் செயதேபு என்ற படத்தில் குழந்தையாக நடித்தபோது இவரது திரையுலக வாழ்க்கை தொடங்கியது.

பிறப்பு மற்றும் குடும்பம்

[தொகு]

1947 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதியன்று கட்டாக்கு நகரத்தில் சுவரூப் நாயக்கு பிறந்தார். [1] ஒடியா நடிகை பர்பதி கோசு இவரது சகோதரி என்றும், ஒடியா பாடலாசிரியர் சாரதா பிரசன்னா நாயக்கு இவர்களின் சகோதரர் என்றும் அறியப்படுகிறார். [2]

இறப்பு

[தொகு]

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27 ஆம் தேதியன்று கட்டாக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சுவரூப் நாயக்கு இறந்தார். [3] இறக்கும்போது இவருக்கு 76 வயதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ସ୍ୱରୂପ ନାୟକ: ଅଭିନେତାରୁ ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶକ". ଧରିତ୍ରୀ ୦୪/୦୧/୨୦୧୬, ଭୁବନେଶ୍ୱର ସଂସ୍କରଣ (ପୃଷ୍ଠା ୧୧). 4 January 2016. http://www.dharitri.com/e-Paper/Bhubaneswar/040116/p11.htm. பார்த்த நாள்: 27 June 2022. 
  2. "From ‘Laxmi’ to ‘Sansara’, Nayak created a huge cinematic canvas". The New Indian Express. 10 September 2020. https://www.newindianexpress.com/states/odisha/2020/sep/10/from-laxmi-to-sansara-nayak-created-a-huge-cinematic-canvas-2194946.html. பார்த்த நாள்: 28 October 2023. 
  3. Sharma, Vikash (27 October 2023). "Odia music director Swarup Nayak passes away after battle with cancer" (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 27 October 2023.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவரூப்_நாயக்கு&oldid=3817121" இலிருந்து மீள்விக்கப்பட்டது