சிவப்புத் திராட்சைத் தோட்டம்
சிவப்புத் திராட்சைத் தோட்டம் | |
---|---|
ஓவியர் | வின்சென்ட் வான் கோ |
ஆண்டு | 1888 |
வகை | கன்வசில் நெய்வண்ணம் |
பரிமானங்கள் | 75 சமீ × 93 சமீ (29.5 அங் × 36.6 அங்) |
இடம் | கவின்கலைகளுக்கான புசுக்கின் அருங்காட்சியகம், மாசுக்கோ |
சிவப்புத் திராட்சைத் தோட்டம் (The Red Vineyard) என்பது, டச்சு ஓவியரான வின்சென்ட் வான் கோ வரைந்த ஒரு ஓவியம். இது நவம்பர் 1888ன் தொடக்கப்பகுதியில் வரையப்பட்டது. இந்த ஓவியர் உயிரோடு இருந்தபோது விற்கப்பட்ட அவரது ஒரே ஓவியம் இதுவெனச் சொல்லப்படுகிறது.
பிரசெல்சில் இடம்பெற்ற லெஸ் XX 1890 ஆண்டுக் கண்காட்சியில் இந்த ஓவியம் முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போது, உணர்வுப்பதிவுவாத ஓவியரும், லெஸ் XX இன் உறுப்பினரும், ஓவியச் சேகரிப்பாளருமான[1][2] அன்னா பொச் இவ்வோவியத்தை 400 பிராங்குகள் விலை கொடுத்து வாங்கினார்.[3] அன்னா இன்னொரு உணர்வுப்பதிவுவாத ஓவியரும், வின்சென்ட் வான் கோவின் நண்பருமான இயுசீன் பொச்சின் சகோதரி ஆவார்.
பின்னர், பிரபல உருசியச் சேகரிப்பாளரான சேர்கீ இசுச்சூகின் இதை வாங்கியிருந்தார்.[4] உருசியப் புரட்சிக்குப் பின்னர் போல்செவிக்குகளால் இவருடைய சேகரிப்புக்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது இதுவும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுப் பின்னர், மாசுக்கோவிலுள்ள, கவின்கலைகளுக்கான புசுக்கின் அருங்காட்சியகத்துக்கு அனுப்பப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hulsker (1980), 356
- ↑ Pickvance (1984), 168–169;206
- ↑ Anna Boch.com, impressionist painter and Art Collector
- ↑ History of the Red Vineyard painting by Anna Boch.com