சிவப்பு நிலா (1998 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவப்பு நிலா (Sivappu Nila) 1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படமாகும். ஜே. ஜார்ஜ் பிரசாத் தயாரித்து, இயக்கியிருந்தார். ராஜா, வினிதா, வினு சக்ரவர்த்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ், சின்னி ஜெயந்த், அலெக்ஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். தேவா இசை அமைத்த இத்திரைப்படம், 25 டிசம்பர் 1998 ஆம் தேதி வெளியானது.[1][2]

நடிகர்கள்[தொகு]

ராஜா, வினிதா, வினு சக்ரவர்த்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ், சின்னி ஜெயந்த், அலெக்ஸ், பேனெர்ஜீ, லூசே மோகன், ஓமக்குச்சி நரசிம்மன், வாஹினி, இளவரசி, அனுஜா, ஜூனியர் ரதி, துர்கா, மஹேந்திரன், மாஸ்டர் அஜாருத்தீன், ராஜ்காந்த், பீமேஸ்வர ராவ், வி. சத்ய நாராயணா, ஜூடோ ரமேஷ்.

கதைச்சுருக்கம்[தொகு]

கடத்தல்காரன் துரையின் கொலை வழக்கை விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி ராஜா (ராஜா). முகமூடியும், கருப்பு கோட்டும் அணிந்து, வெள்ளை குதிரையில் வந்து கொலை செய்தான் என்ற துப்பைத் தவிர வேறுதுவும் ராஜாவிற்கு கிடைக்கவில்லை. அந்நிலையில், ராணி (வினிதா) எனும் கல்லூரி மாணவியை விரும்புகிறார் ராஜா. ராணி போலவே முக ஜாடை கொண்ட ஜான்சியை சந்திக்கிறார் ராஜா. ராணியின் சகோதரி ஜான்சி என்று பொய் சொல்கிறாள். கொள்ளைக்காரன் மருது (அலெக்ஸ்) அதே நபரால் கொல்லப்படுகிறான். ராணி தான் கொலையாளி என்று ராஜா கண்டு பிடிக்க, தனது கடந்த காலத்து உண்மையை கூறினாள் ராணி.

கடந்த காலத்தில், லட்சுமி (வாஹினி) ராணி மற்றும் அவர்களது தந்தை மாஜி போலீஸ் அதிகாரி ராமச்சந்திரன் (டெல்லி கணேஷ்) ஆகியோர் ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். அவ்வாறாக ஒரு நாள், ரவுடி மாணிக்கத்தை லட்சுமி அடித்து விடுகிறாள். கோபமடைந்த மாணிக்கம் அவனது நண்பர்கள் மருது மற்றும் துரையுடன் சேர்ந்து, லட்சுமியை மானபங்க படுத்தினர். புகார் பதிவு செய்தும், சரியான ஆதாரம் இல்லாதால், மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. நீதி கிடைக்காத லட்சுமி தற்கொலை செய்ததால், மூவரையும் பழிவாங்க ராணியும் ராமச்சந்திரனும் முடிவு செய்தனர்.

அனைத்தையும் கேட்ட ராஜா, ராணியை சரணடைய கேட்டுக்கொண்டார். ராஜாவின் பேச்சைக் கேளாமல், மாணிக்கத்தை கொள்கிறாள் ராணி. போதிய ஆதாரம் இல்லாததால், நீதிமன்றம் ராணியை விடுதலை செய்தது.

ஒலிப்பதிவு[தொகு]

5 பாடல்களைக் கொண்ட இசைத்தொகுப்பு 1998 ஆம் ஆண்டு வெளியானது. பொன்னியின் செல்வன் எழுதிய பாடல் வரிகளுக்கு தேவா இசை அமைத்திருந்தார்.[3][4]

  1. சிவகாசி மேஸ்திரி
  2. ஹார்டீனா டைமன்டா
  3. பூப்பறிக்க
  4. நீ மீன ராசி பொண்ணா
  5. பூவுக்குள் புயல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "jointscene.com". Archived from the original on 2011-08-20. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "spicyonion.com".
  3. "play.raaga.com".
  4. "mio.to". Archived from the original on 2017-11-14. பார்க்கப்பட்ட நாள் 2019-02-27.