வசுந்தரா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசுந்தரா தேவி
வசுந்தராதேவியும் ரஞ்சனும் மங்கம்மா சபதத்தில் (1943)
பிறப்புவசுந்தரா தேவி
1917
சென்னை, இந்தியா
இறப்புசெப்டம்பர் 7, 1988 (அகவை 70–71)
பணிநடிகை, நடனக் கலைஞர்
வாழ்க்கைத்
துணை
எம். டி. ராமன்
பிள்ளைகள்வைஜெயந்திமாலா

வசுந்தரா தேவி (Vasundhara Devi, 1917 - செப்டம்பர் 7, 1988)[1] தென்னிந்தியத் திரைப்பட நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும், கருநாடக இசைப் பாடகியும் ஆவார்.[2] இவர் பின்னாளில் பிரபலமான நடிகை வைஜெயந்திமாலாவின் தாயார் ஆவார்.[3]

வசுந்தரா 1941 ஆம் ஆண்டில் ரிஷ்யசிருங்கர் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.[2] 1943 இல் வெளியான மங்கம்மா சபதம் திரைப்படத்தில் மங்கம்மாவாக நடித்துப் புகழ் பெற்றார்.[2] வசுந்தராதேவியும், மகள் வைஜயந்திமாலாவும் இணைந்து பைகாம் (1959) என்ற இந்தித் திரைப்படத்திலும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பான இரும்புத்திரை திரைப்படத்திலும் நடித்தனர்.

வசுந்தரா எம். டி. ராமன் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்கள் பின்னர் மணமுறிப்பு செய்தனர். வசுந்தராதேவி 1988 செப்டம்பர் 7 இல் காலமானார்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. வைஜெயந்திமாலா (2007). Bonding... A Memoir. Stella Publishers. பார்க்கப்பட்ட நாள் 16 சனவரி 2016.
  2. 2.0 2.1 2.2 ராண்டார் கை (2007-11-23). "blast from the past". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2007-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071201090231/http://www.hindu.com/cp/2007/11/23/stories/2007112350421600.htm. பார்த்த நாள்: 2011-04-13. 
  3. "வாள் வீச்சில் புகழ் பெற்ற ரஞ்சன்: இந்திப் படங்களிலும் வெற்றிக் கொடி நாட்டினார்". மாலை மலர். 27 பெப்ரவரி 2011 இம் மூலத்தில் இருந்து 2011-07-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110721131915/http://www.maalaimalar.com/2011/02/11141603/history-of-ranjan.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுந்தரா_தேவி&oldid=3299417" இலிருந்து மீள்விக்கப்பட்டது