பிரம்ம லோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பிரபஞ்ச புருசனான விஷ்ணுவின் தலைப் பகுதியாக பிரம்ம லோகம் குறிக்கப்படுகிறது.

இந்து சமய சாத்திரங்களான புராணங்களில் குறிப்பாக பிரம்ம புராணத்தில், மும்மூர்த்திகளில் ஒருவரும், படைப்புக் கடவுளுமான, நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவின் இருப்பிடமாக பிரம்ம லோகம் எனும் சத்திய லோகம் குறிப்பிடுகிறது.

வேதம், உபநிடதம் மற்றும் புராணக் குறிப்புகள்[தொகு]

அதர்வண வேதத்தில் மேல் ஏழு லோகங்களில் ஒன்றாக பிரம்ம லோகம் குறித்த குறிப்புகள் உள்ளது. உபநிடதங்களில் பிரம்ம லோகம் பற்றிய குறிப்புகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அனைத்து புராணங்களிலும் படைப்புக் கடவுளான நான்முகன் எனும் பிரம்மா தனது துனைவியான சரசுவதியுடன் குடிகொண்டிருக்கும் பிரம்ம லோகம் எனும் சத்திய லோகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.

பௌத்தம் கூறும் பிரம்ம லோகம்[தொகு]

பௌத்த சாத்திரங்கள் வானுலகில் பிரம்ம லோகம் இருபத்தி ஒன்று சொர்க்கங்கள் கொண்டிருப்பதாக கூறுகிறது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.palikanon.com/english/pali_names/b/brahmaloka.htm Palikanon about brahmaloka

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்ம_லோகம்&oldid=3802844" இலிருந்து மீள்விக்கப்பட்டது