நிலநேர்க்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: ar:عرض جغرافي
வரிசை 17: வரிசை 17:
[[af:Breedtegraad]]
[[af:Breedtegraad]]
[[als:Geografische Breite]]
[[als:Geografische Breite]]
[[ar:دائرة عرض]]
[[ar:عرض جغرافي]]
[[ast:Llatitú]]
[[ast:Llatitú]]
[[be:Шырата]]
[[be:Шырата]]

01:15, 10 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

புவியின் நிலப்படம்
நிலநிரைக்கோடு (λ)
நிலநிரைக் கோடுகள் இங்கே வளை கோடுகளாகத் தெரிகின்றன. உண்மையில் இவை பெரு வட்டத்தின் அரைப் பகுதிகளாகும்.
நிலநேர்க்கோடு (φ)
இங்கே நிலநேர்க்கோடுகள் கிடைக் கோடுகளாகத் தெரிகின்றன. உண்மையில் இவை வெவேறு விட்டங்களைக் கொண்ட வட்டங்களாகும்.
நிலநடுக்கோடு புவிக் கோளத்தை வட அரைக்கோளம், தென் அரைக்கோளம் என இரண்டாகப் பிரிக்கின்றது. இதன் அளவு 0°.

நிலநேர்க்கோடு (இலங்கை வழக்கு: அகலாங்கு) (latitude) என்பது புவிமையக் கோட்டுக்கு இணையாக புவி மேற்பரப்பில் வரையப்படுகின்ற கற்பனைக் கோடுகளுள் ஒன்றைக் குறிக்கும். புவியின் மேற்பரப்பில் உள்ள ஒரு புள்ளியின் அமைவிடத்தைக் குறிப்பிடும்போது அப்புள்ளி அமைந்திருக்கும் நில நேர்க்கோடு ஒரு கூறாகக் குறிக்கப்படுகின்றது. நிலப்படங்களில் இக் கோடுகளில் சில கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் கிடைக் கோடுகளாகக் குறிக்கப்படுகின்றன. நுட்ப அடிப்படையில், இக் கோடுகள் கோண அளவீடாகப் பாகைகளில் குறிப்பிடப்படுகின்றன. இந்த அளவீடு நில நடுக்கோட்டில் 0° இல் தொடங்கி வடக்கே வட துருவத்தில் 90° வ இலும் தெற்கே தென் துருவத்தில் 90° தெ இலும் முடிகின்றது.

நிலநேர்கோட்டு வட்டங்கள்

நிலநேர்கோடுகள் புவிமேற்பரப்பில் ஏறத்தாழ வட்டங்களாக அமைவதால் இவை நிலநேர்கோட்டு வட்டங்கள் எனப்படுகின்றன. புவியிலுள்ள ஒரு இடத்தைத் துல்லியமாகக் குறிப்பதற்கு நிலநேர்கோட்டு அளவுடன் நிலநிரைக்கோட்டு அளவும் சேர்த்துக் குறிப்பிடப்படுகின்றன.

சில சிறப்பு நிலநேர்கோட்டு வட்டங்கள்

நிலநடுக்கோட்டு வட்டம் தவிர, மேலும் சில நிலநேர்கோட்டு வட்டங்கள், சூரியனுடன் புவி கொண்டுள்ள தொடர்புகளில் அவை வகிக்கும் பங்குகளுக்காகச் சிறப்புப் பெறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலநேர்க்கோடு&oldid=922325" இலிருந்து மீள்விக்கப்பட்டது