ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: fa:برنامه محیط زیست ملل متحد
சி Removed category "அரசு சார்பற்ற அமைப்புக்கள்"; Quick-adding category "ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்" (using HotCat)
வரிசை 23: வரிசை 23:




[[பகுப்பு:அரசு சார்பற்ற அமைப்புக்கள்]]
[[பகுப்பு:சூழல்சார் அமைப்புக்கள்]]
[[பகுப்பு:சூழல்சார் அமைப்புக்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்]]


[[ar:برنامج الأمم المتحدة للبيئة]]
[[ar:برنامج الأمم المتحدة للبيئة]]

05:43, 11 மே 2011 இல் நிலவும் திருத்தம்

ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்
நிறுவப்பட்டது1972
வகைதிட்டம்
சட்டப்படி நிலைஇயங்குநிலை
இணையதளம்http://www.unep.org/

ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (United Nations Environment Programme) என்பது, ஐக்கிய நாடுகள் சபையின் சூழல் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு அமைப்பு ஆகும். இது வளர்ந்துவரும் நாடுகள் சூழல் தொடர்பில் பயனுள்ள கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு உதவுவதுடன், முறையான சூழல்சார் செயல்முறைகள் ஊடான தாங்கு வளர்ச்சியையும் ஊக்குவித்து வருகிறது. கெனியாவின் தலைநகரான நைரோபியில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு, மனிதச் சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து 1972 யூன் மாதத்தில் நிறுவப்பட்டது. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்துக்கு ஆறு உலகப்பகுதி அலுவலகங்களும், பல நாடுகளுக்கான அலுவலகங்களும் உள்ளன.

உலகம், உலகப்பகுதிகள் ஆகிய மட்டங்களில் சூழல்சார் விடயங்களுக்கான அதிகாரம் அளிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு இதுவே. சூழல் தொடர்பான ஒருமனதான கொள்கைகளின் உருவாக்கத்தை ஒருங்கிணைப்பதற்கான ஆணை இதற்கு வழங்கப்பட்டுள்ளது. உலகம் தழுவிய சூழலைத் தொடர்ச்சியான மீளாய்வுக்கு உட்படுத்துவதன் மூலமும், புதிதாக உருவாகக்கூடிய பிரச்சினைகளை அரசுகளினதும், உலக சமுதாயத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவதன் மூலமும் இப்பணியை ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்துக்கான ஆணையும் அதன் குறிக்கோள்களும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், அறிவிப்புகளையும் அடிப்படையாகக் கொண்டவை. 1972 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 2997 (XXVII), அதற்கு 1992 இல் செய்யப்பட்ட திருத்தங்கள், ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் ஆட்சிக் குழுவின் 19 ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் பங்கும் ஆணையும் தொடர்பான நைரோபி அறிக்கை, 2000 ஆண்டு மே 31 ஆம் தேதி வெளியிடபட்ட மால்மோ அமைச்சக அறிக்கை என்பன இவையாகும்.

இவ்வமைப்பின் நடவடிக்கைகள் வளிமண்டலம், கடல்சார்ந்தனவும், நிலம்சார்ந்தனவுமான சூழ்நிலை மண்டலங்கள் என்பன சார்ந்த விடயங்களோடு தொடர்புபட்டவை. பன்னாட்டுச் சூழல் மரபொழுங்குகளை உருவாக்குவதிலும்; சூழல் அறிவியல், தொடர்பான தகவல்கள், கொள்கைகளில் அவற்றின் பங்குகள் குறித்து விளக்குதல்; கொள்கைகளை உருவாக்குதல் அவற்றை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் நாட்டு அரசுகளுடனும், உலகப்பகுதி அமைப்புக்களுடனும் பணியாற்றுதல்; சூழல்சார் அரசுசாரா அமைப்புக்களுடன் சேர்ந்து பணியாற்றுதல் ஆகியவற்றில் இவ்வமைப்புக் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியுள்ளது.