திருநங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி தானியங்கிஇணைப்பு: eo:Transvirino
வரிசை 34: வரிசை 34:
[[de:Transfrau]]
[[de:Transfrau]]
[[en:Trans woman]]
[[en:Trans woman]]
[[eo:Transvirino]]
[[fa:تغییر جنسیت (مرد به زن)]]
[[fa:تغییر جنسیت (مرد به زن)]]
[[fi:Transnainen]]
[[fi:Transnainen]]

01:39, 19 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:பால் வகுபாடு

திருநங்கைகள் கொடி
திருநங்கைகள் கொடி
A trans woman with XY written on her hand, at a protest in Paris, October 1, 2005.

திருநங்கை (Transwoman) எனப்படுவோர் ஆண் உறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும்.


சமூக சிக்கல்கள்

இந்தியா

பல காலமாக அலி, பேடி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் பொதுவாகத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, அரவாணிகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள். இதுவே இவர்கள் சமூக நிலையாக இருக்கிறது.

கனடா

திருநங்கைகள் சட்டப்படி முழு உரிமையும் பெற்ற, ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாக வாழ்கின்றார்கள்.

பண்பாடு

மரபு ரீதியான இனப் பெருக்கத்தின் அடிப்படையிலான தொடர்ச்சி எதுவும் இல்லாமலேயே அரவாணிகள் சமூகம், தமது பாரம்பரியத்தை வரலாற்றோடு இனம் கொண்டு ஒரு சமூகத்தையும், தனித்துவமான குடும்ப அமைப்புகளையும், தனித்துவமான சடங்குகளையும், வாய்மொழி மரபுகளையும் பேணி வருகிறது. பல்வேறு தனித்துவம் கொண்ட வேறுபட்ட கூறுகளையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கொண்ட தேசமாய் விளங்கும் இந்தியா முழுக்க அரவாணிகள் சமூகம் தனக்கென ஒரு பொதுப் பண்பாட்டையும், பொது கலாச்சார சடங்குகளையும், பொது வழக்காற்றையும் கொண்டுள்ளது. பொதுவான நாட்டார் வழக்காற்றிலிருந்து அரவாணிகள் வழக்காறு முற்றிலும் வேறுபட்டது.

கூத்தாண்டவர் திருவிழா

ஒரு அரவாணியின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வு கூத்தாண்டவர் திருவிழா. அந்த அளவிற்கு அரவாணிகளின் உணர்வோடு பின்னிப் பினைந்த ஒரு சமுதாயச் சடங்குஅது. அரவாணிகள் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் பௌர்ணமி நாளன்று கொண்டாடப்படுகிறது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநங்கை&oldid=670090" இலிருந்து மீள்விக்கப்பட்டது