இலரி கிளின்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: be:Хілары Клінтан
சி தானியங்கிஇணைப்பு: mn:Хиллари Родхэм Клинтон
வரிசை 90: வரிசை 90:
[[mk:Хилари Клинтон]]
[[mk:Хилари Клинтон]]
[[ml:ഹിലരി ക്ലിന്റൺ]]
[[ml:ഹിലരി ക്ലിന്റൺ]]
[[mn:Хиллари Родхэм Клинтон]]
[[mr:हिलरी क्लिंटन]]
[[mr:हिलरी क्लिंटन]]
[[ms:Hillary Rodham Clinton]]
[[ms:Hillary Rodham Clinton]]

03:44, 19 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

இலரி கிளின்டன்
United States Senator
from நியூ யார்க்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஜனவரி 3, 2001
Serving with சக் சூமர்
முன்னையவர்தானியே பற்றிக் மொய்யான்
பின்னவர்பதவியில் உள்ளார் (2013)
ஐக்கிய அமெரிக்க முதற்பெண்
பதவியில்
ஜனவரி 20, 1993 – ஜனவரி 20, 2001
முன்னையவர்பாப்பிரா புஷ்
பின்னவர்லோறா புஷ்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்அமெரிக்கர்
அரசியல் கட்சிமக்களாட்சிக் கட்சி
உயரம்174 cm
துணைவர்பில் கிளின்டன்
பிள்ளைகள்செல்சியா கிளின்டன்
முன்னாள் கல்லூரிவெஸ்லி கல்லூரி
யேல் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞ்சர், அரசியல்வாதி
கையெழுத்து

இலரி டயான் ரோட்டம் கிளின்டன் (Hillary Diane Rodham Clinton) நியூ யார்க் மக்களின் சார்பான ஐக்கிய அமெரிக்காவின் செனட் அவை (மேலவை) உறுப்பினர். 2008இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் தலைவராக தேர்வதற்கு வேட்பாளராக போட்டியிடுபவர்களில் ஒருவரும் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் 42வது குடியரசுத் தலைவரான பில் கிளின்டனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1993 முதல் 2001 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் "முதல் பெண்மணி" என்னும் பட்டத்துடன் இருந்தார்.

இலினொய் மாநிலவத்தவரான இலரி 1973 ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். 1975 ஆம் ஆண்டு பில் கிளின்டனை மணந்து ஆர்க்கன்சஸ் மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கே காங்கிரஸ் சட்ட அலோசகராக பணியாற்றினார். இதன் பின் 1979 ஆம் ஆண்டில் றொசு சட்ட நிறுவனத்தில் முதல் பெண் பங்காளராக அறிவிக்கப்பட்டார். 1983, 1992 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவின் 100 பலமிக்க வழக்கறிஞர்களுள் ஒருவராக அறிவிக்கப்பட்டார். 1979 முதல் 1981 வரையும் 1983 முதல் 1992 வரையும் ஆர்கன்சஸ் மாநிலத்தின் முதன் பெண்ணாக குழந்தைகளின் பராமரிப்புத் தொடர்பான பல நிறுவனங்களிலும் பணியாற்றினார். மேலும் வோல் மார்ட் உட்பட சில வியாபார நிறுவனங்களின் இயக்குனர் அவையிலும் பங்காறினார்.

ஐக்கிய அமெரிக்காவின் முதல் பெண்ணாக கொள்கை விடயங்களில் முன்னணியில் இருந்து செயற்பட்டார். 1994 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிகாவின் செனட் அவை அங்கீகாரம் மறுத்த கிளின்டன் சுகாதாரத் திட்டம் (Clinton health care plan) இவரது முக்கிய பங்களிப்பாகும். ஆனால் 1997 ஆம் ஆண்டு அரச குழந்தைகள் காப்புறுதித் திட்டம் (State Children's Health Insurance Program), தத்தெடுத்தல் மற்றும் பாதுகாப்பான குடும்பத்திட்டம் (Adoption and Safe Families Act) என்பவற்றை நிறுவினார். 1996 ஆம் ஆண்டு வைட்வாட்டர் சர்ச்சையின் காரணமாக நீதிமன்றில் தோன்றும் படி நிதிமன்றம் ஆணை பிறபித்திருந்தது. இவ்வாறு கோரப்பட்ட ஒரே அமெரிக்க முதன் பெண் இவராவார். கணவரான பில் கிளின்டனின் அதிபர் பதவிக்காலத்தில் நடந்ததாக கூறப்பட்ட சில சீர்கேடுகள் தொடர்பாக இவர் விசாரிக்கப்பட்டாலும் ஒன்றிலும் குற்றஞ்சாட்டப்படவில்லை. 1998 ஆம் ஆண்டு லெவீன்ஸ்கி சர்ச்சையின் போது இவரது மணவாழ்கை கேள்விக்குறியாக காணப்பட்டது.

2000 ஆம் நியூ யார்க்க்குகு இடம்பெயர்ந்து 2000 ஆம் அம்மாநிலம் சார்பான முதல் பெண் செனட் அவை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். அமெரிக்க முதல் பெண்ணொருவர் தேர்தலில் போட்டியிட்டதும் இதுவே முதல் முறையாகும். செனட் அவை உறுப்பினராக ஜோர்ஜ் புஷ்சின் ஆட்சியில் சில வெளிநாட்டுக் கொள்கைகளில் ஆதரவாக வாக்களித்தார். ஈராக் போர் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த இலரி பின்னர் அதனை எதிர்த்தார். மேலும் ஜோர்ஜ் புஷ்சின் உள்நாட்டுக் கொள்கைகளை அவர் பலமாக எதிந்த்த்தார். 2006 ஆம் ஆண்டு மீண்டும் செனட் அவைக்கு தெரிவுச் செய்யப்பட்டார். 2008 அதிபர் தேர்தலின் போது மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளாராக வரும் வாய்ப்பு இலரிக்கு காணப்படுவதாக நாடு தழுவிய கருத்துக் கணிப்புகள் காட்டினாலும் முக்கிய அயோவா ஆரம்ப தேர்தலின் போது மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலரி_கிளின்டன்&oldid=633460" இலிருந்து மீள்விக்கப்பட்டது