திருவெக்கா சொன்ன வண்ணம்செய்த பெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
/* திருமழிசை ஆழ்வார் வரலாறுஆழ்வார்கள் வரலாறு (இரண்டாம் புத்தகம்) : புலவர் கா. ர. கோவிந்தராச முதல
வரிசை 44: வரிசை 44:
==திருமழிசை ஆழ்வார் வரலாறு<ref>ஆழ்வார்கள் வரலாறு (இரண்டாம் புத்தகம்) : புலவர் கா. ர. கோவிந்தராச முதலியார். திருநெல்வேலிதென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம். சென்னை. 1967</ref>==
==திருமழிசை ஆழ்வார் வரலாறு<ref>ஆழ்வார்கள் வரலாறு (இரண்டாம் புத்தகம்) : புலவர் கா. ர. கோவிந்தராச முதலியார். திருநெல்வேலிதென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம். சென்னை. 1967</ref>==


கணிகண்ணன் திருமழிசையாருடைய சீடன். கச்சிப்பதியில் அரசுபுரிந்த பல்லவ அரசன் கணிகண்ணனிடம் தன்னை ஏற்றிக்கவிதைபாடச்சொல்ல அவர் மானிடனைப்பாடுவது குற்றம் என்று கூறி திருமாலைப்பாடினார். அரசன் அவரை நகரைவிட்டு வெளியே போய்விட உத்தரவிட்டான். அவருடைய குரவர் திருமழிசைப்பிரான், 'உம்முடன் நானும் வருவேன்' என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கச்சிப்பதிக்கோவிலுக்குச்சென்று ஆண்டவனை நோக்கி,
கணிகண்ணன் [[திருமழிசை ஆழ்வார்|திருமழிசையாருடைய]] சீடன். கச்சிப்பதியில் அரசுபுரிந்த பல்லவ அரசன் கணிகண்ணனிடம் தன்னை ஏற்றிக்கவிதைபாடச்சொல்ல அவர் மானிடனைப்பாடுவது குற்றம் என்று கூறி திருமாலைப்பாடினார். அரசன் அவரை நகரைவிட்டு வெளியே போய்விட உத்தரவிட்டான். அவருடைய குரவர் திருமழிசைப்பிரான், 'உம்முடன் நானும் வருவேன்' என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கச்சிப்பதிக்கோவிலுக்குச்சென்று ஆண்டவனை நோக்கி,


:கனிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
:கனிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி

04:19, 31 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்


திருவெக்கா

பிறபெயர்கள்: சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில்.
மூலவர்: சொன்ன வண்ணம் செய்த பெருமாள், திரு யதோதகாரி, திருவெக்கனை கிடந்தான்.
தாயார்: கோமளவல்லி நாச்சியார்
உத்சவர்: திரு யதோதகாரி பெருமாள்
உத்சவ தாயார்:
புஷ்கரணி: பொய்கை.
விமானம்: வேதாசார விமானம்.
பாசுரம்: பொய்கை ஆழ்வார் (1), பேயாழ்வார் (4), திருமங்கை (6), திருமழிசை (3), நம்மாழ்வார் (1).
அமைவிடம்: காஞ்சிபுரம்
மாநிலம்: தமிழ்நாடு, இந்தியா

தலபுராணம்

பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யா விரத தலமான காஞ்சிக்கு வந்து, உத்தரவேதி என்னும் யாகசாலையில் யாகம் வளர்த்தார். ஆனால் தனது மனைவியான சரஸ்வதியை விட்டு யாகம் தொடங்கினர். இதனால் வெகுண்ட சரஸ்வதி உலகை இருளாக்க, நாராயணன் விளக்கொளி பெருமாளாக திருதன்காவில் தோன்றினர். யாகத்தை தொடர்ந்த பிரம்மாவை தடுக்க, சரஸ்வதி சரபம் எனும் பறவை மிருக உருவில் அசுரனை ஏவ, நாராயணன் எட்டு கைகளில் திவ்ய ஆயுதங்களுடன் அட்டபுயகரனாய் வந்து சர்பத்தை அழித்தார். பின்னர் பிரம்மா மீண்டும் தொடர்ந்த யாக தீயை அழிக்க, சரஸ்வதி தேவியே வெள்ளப்பெருக்காய் வேகவதி ஆறாய் பெருகிவர, பகவன் தானே அனையாய் நதியின் குறுக்கே கிடந்தது நதியின் போக்கை மாற்றி யாக தீயை காத்த தலமே திருவெக்கா ஆகும். இதனாலே பெருமாள் வெக்கனை கிடந்தான் என அழவர்களால் அருளப்படுகிறார்.

திருமழிசை ஆழ்வார் வரலாறு[1]

கணிகண்ணன் திருமழிசையாருடைய சீடன். கச்சிப்பதியில் அரசுபுரிந்த பல்லவ அரசன் கணிகண்ணனிடம் தன்னை ஏற்றிக்கவிதைபாடச்சொல்ல அவர் மானிடனைப்பாடுவது குற்றம் என்று கூறி திருமாலைப்பாடினார். அரசன் அவரை நகரைவிட்டு வெளியே போய்விட உத்தரவிட்டான். அவருடைய குரவர் திருமழிசைப்பிரான், 'உம்முடன் நானும் வருவேன்' என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் கச்சிப்பதிக்கோவிலுக்குச்சென்று ஆண்டவனை நோக்கி,

கனிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்

என்று விண்ணப்பம் செய்தார். அப்பெருமானும் அப்படியே செய்து திருமழிசைப்பிரானைத் தொடர்ந்து சென்றார். பெருமாளை தொடர்ந்து திருமகளும் செல்ல கச்சி நகரம் இருண்டு மங்கலம் குறைந்து. இதை மறுநாள் அறிந்த அரசன் வருத்தமுற்று கணிகண்ணனைத் தேடிச்சென்று அவரையும் அவர் குரவரையும் கச்சிப்பதிக்குத் திரும்பும்படி வேண்டிக் கொண்டனர். கணிகண்ணன் திருமழிசைப் பிரானை வேண்ட அவரும் ஆண்டவனை நோக்கி

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.

என்று வேண்ட திருமகள்நாதனும் அவ்வண்ணமே செய்தான் என்பது வரலாறு. இதனாலே பெருமாள், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என போற்றப்பெருகிறார்.

  1. ஆழ்வார்கள் வரலாறு (இரண்டாம் புத்தகம்) : புலவர் கா. ர. கோவிந்தராச முதலியார். திருநெல்வேலிதென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம். சென்னை. 1967