இயக்க ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bg:Кинетична енергия
சி தானியங்கி இணைப்பு: ur:حرکی توانائی
வரிசை 56: வரிசை 56:
[[tr:Kinetik enerji]]
[[tr:Kinetik enerji]]
[[uk:Кінетична енергія]]
[[uk:Кінетична енергія]]
[[ur:حرکی توانائی]]
[[vi:Động năng]]
[[vi:Động năng]]
[[zh:动能]]
[[zh:动能]]

12:22, 18 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

ஒரு பொருளின் இயக்க ஆற்றல் என்பது அப்பொருளின் நகர்ச்சி காரணமாக அதனிடம் இருக்கும் அதிக (எச்சான) ஆற்றலாகும். ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள பொருளை, அதன் சடநிலையில் இருந்து தற்போதைய வேகத்திற்குச் செலுத்தத் தேவையான வேலையே (பளு) இயக்க ஆற்றல் என்று வழங்கப் படும்.

தனது முடுக்கத்தின் போது அடைந்த ஆற்றலை அதன் வேகம் மாறாதிருக்கும் வரை அப்பொருள் மாறாமல் கொண்டிருக்கும். அதே அளவுள்ள ஆற்றலை நொசிவாகச் (அல்லது எதிராகச்) செலுத்தினால் மட்டுமே அதன் வேகம் மட்டுப்பட்டு அப்பொருள் நிலைக்குத் திரும்பும்.

முதன்மைக் கட்டுரை: ஆற்றல்

இயக்க ஆற்றலைச் சரியாகப் புரிந்து கொள்ள சில காட்டுக்களைப் பார்ப்போம். ஒரு மிதிவண்டியோட்டி தான் உண்ட உணவின் வேதி ஆற்றலைப் பயன்படுத்தி மிதிவண்டியை மிதித்துச் செல்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் செல்கிறார். அந்த வேகத்தில் காற்றின் எதிர்த் தடையையும் உராய்வையும் தவிர்க்கத் தேவையானது போக அதிக வேலை செய்யாமலே அதே வேகத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க முடியும். இங்கு ஆற்றல் இயக்கத்தின் ஆற்றலாக (இயக்க ஆற்றல்) மாற்றப் பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆற்றல் மாற்றம் மிகுந்த செயல்திறன் கொண்டதல்ல. பக்கவிளைவாய் மிதிவண்டியோட்டியினுள்ளே வெப்பமும் உண்டாக்கப் பட்டிருக்கும்.

நகரும் மிதிவண்டியினதும், வண்டியோட்டியினதுமான இயக்க ஆற்றலைப் பிற வடிவங்களுக்கும் மாற்ற முடியும். எச்சான வேலை செய்யாமல் ஒரு மலையுச்சியில் ஏறி அதன் உச்சிக்கு வந்தபோது முழுமையாக வண்டி நின்று போனால், அங்கே இயக்க ஆற்றல் புவியீர்ப்பு நிலை ஆற்றலாக மாறியிருக்கும். மீண்டும் மலையுச்சியின் மறுபக்கம் சென்று கீழே செலுத்துவாராயின் நிலை ஆற்றல் மீண்டும் இயக்க ஆற்றலாய் மாறியிருக்கும். ஆற்றலின் ஒரு பகுதி உராய்வின் காரணமாய் வெப்ப ஆற்றலாக மாறி இருக்கும் என்பதால், முந்தைய வேகத்தை அப்படியே பெற இயலாது. அதற்கு இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். ஆற்றல் அழிந்து போகவில்லை. ஒரு வடிவத்தில் இருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறி இருக்கிறது. அவ்வளவே. அதேபோல ஓட்டுனர் பிரேக் (தடை) கைக்கொண்டால் அப்போது இயக்க ஆற்றல் முழுவதுமாக உராய்வின் காரணமாக வெப்ப ஆற்றலாய் மாறியிருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்க_ஆற்றல்&oldid=319123" இலிருந்து மீள்விக்கப்பட்டது