இயங்குபடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அனிமே
வரிசை 78: வரிசை 78:
* [http://www.sparetimelabs.com/animato/animato/cartoon/cartoon.html The making of an 8-minute cartoon short]
* [http://www.sparetimelabs.com/animato/animato/cartoon/cartoon.html The making of an 8-minute cartoon short]
* [http://www.vidaao.com/learn/intro-to-animation-production Introduction to animation video production]
* [http://www.vidaao.com/learn/intro-to-animation-production Introduction to animation video production]
* [http://www.nfb.ca/film/animando_english/ "Animando"], a 12-minute film demonstrating 10 different animation techniques (and teaching how to use them).
* [http://www.nfb.ca/film/animando_english/ "Animando"], a 12-minute film demonstrating 10 different animation techniques (and teaching how to use them).

[[பகுப்பு:இயங்குபடம்]]
[[பகுப்பு:இயங்குபடம்]]
[[பகுப்பு:கணினி வரைகலை]]
[[பகுப்பு:கணினி வரைகலை]]
[[பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள்]]
[[பகுப்பு:இயங்குபடம் உள்ள கட்டுரைகள்]]
[[பகுப்பு:அனிமே]]

06:51, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

இயங்குபடம் என்பது சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட பல படங்களை வேகமாக இயக்கப்படுவதன் மூலமாக உருவாக்கப்படுவதாகும்.இயக்கமூட்டல் (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாகுவதாகும்.

இந்த ஆறு சட்டங்களை கொண்டது தான் கீழே இருக்கும் இயங்குப்படம்.

இந்த இயங்குப்படம் ஒரு வினாடிக்கு ஆறு சட்டங்கள் வீதம் நகருகிறது.

இயங்குப்படங்களை தயாரிக்க இன்று பல மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன். இயக்கமூட்டலுக்கு 1 நொடிக்கு 24 சட்டங்கள் (frames) தேவைப்படுகின்றன. இயக்கமூட்டலின் முதன்மையான பயன்பாடு எப்பொழுதும் பொழுதுபோக்காகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று கல்விசார் இயக்கமூட்டல் மற்றும் அறிவுறுத்தல் இயக்கமூட்டல் போன்றவைகளில் இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன.

சொற்பிறப்பியல்

இயங்குபடத்திற்குண்டான ஆங்கிலச் சொல் (Animation), அனிமேட்டோ(animātiō, "the act of bringing to life") எனும் இலத்தின் மொழியிலிருந்து வந்ததாகும்.

பிரிவுகள்

  1. இருபரிமாண இயங்குப்படம்
  2. முப்பரிமாண இயங்குப்படம்

இருபரிமாண இயங்குப்படம்

இருபரிமாணங்கள்(x,y) கொண்டது.இருபரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக பிளாஷ் (flash), டுன் பூம் (toonboom) போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முப்பரிமாண இயங்குப்படம்

முப்பரிமாணங்கள் (x,y,z) கொண்டது. முப்பரிமாண இயங்குப்படங்களை உருவாக்க பொதுவாக மாயா maya) போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இயங்குபடத்தின் வரலாறு

முதன் முதலில் இயங்குபடங்களை உருவாக்க ஓவியங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இயங்குபட தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவற்றை குகைகளிலும், பழங்கால தொல்லியல் பொருட்களிலும் கண்டுபிடித்துள்ளனர்.

பழைய கற்கால குகை ஓவிங்களில் மிருகங்கள் சீரான இயக்கத்தை வெளிப்படுத்துபவையாக வரையபட்டிருந்ததை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனர்கள் ’’’ஜோட்ரோப்’’’ எனும் சாதனத்தை கி.பி 180-இல் கண்டுபிடித்துள்ளனர்[1].
1404-1438-களில் வாய்னிச் கையெழுத்துப் பிரதிகளில் பந்து போன்ற ஒரே மாதிரியான உருவங்கள் வரையப்பட்டுள்ளன. அதனை நடுவிலிருந்து சுழற்றிவிட்டால் பந்து ஓடுவது போன்ற மாயயை உருவாக்குவது போல் அமைத்துள்ளனர்[2].

இவை அனைத்தும் முழுமை பெறாத இயங்குபடங்களாகும். இயங்குபடங்களின் வளர்ச்சி திரைப்படவியல் வந்த பின்பே தொடங்கியது. இவை எளிமையானதும் திரைப்படவியலின் முன்னேற்றமே காரணம்.

திரைப்படக்கருவி என்பது ஒளிப்படக்காட்டி (Projector), அச்சுப்பொறி (Printer), புகைப்படக்கருவி (Camera) ஆகியன அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற கருவியாகும். இதனை உருவாக்கியவர்கள் ஆரம்பகால சினிமா தயாரிப்பாளர்களான லூமியர் சகோதரர்கள் ஆவர். உருவாக்கப்பட்ட ஆண்டு 1894 ஆகும்[3]. ஆரம்ப காலங்களில் பெனகிஸ்டோஸ்கோப்(1832), ஜோட்ரோப்(1834), பிராக்ஸினோ ஸ்கோப் (1877) முதலிய சாதனங்கள் வேறுபாடுகள் கொண்ட ஓவிய சட்டங்களை இயக்க உதவியவையாகும்.


முதல் இயக்கத்திரைப்படம்

பிராக்ஸினோ ஸ்கோபி மூலம் திரையிடப்படும் காட்சி

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியரான சார்லஸ் எமிலி என்பவரே முதன் முதலில் இயங்குபடத்தை தயாரித்து திரையிட்டவர் ஆவார். இவர் பிராக்ஸினோ ஸ்கோபியை 1877-இல் கண்டுபிடித்தார். இதில் புகைப்படச் சுருளில் துளையிடப்பட்டு ஒன்றன் பின் ஒன்று வருமாறு செய்யப்பட்டிருந்தது. பின் திரையிடும் கருவியை (Theatre Optique) 1888-ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கண்டுபிடித்தார். 1892-ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் திகதி முதல் இயங்குபடமான ’’’பாவ்ரே பைட்’’’, பாரிஸில் உள்ள முசி கிரேவின் என்னும் திரையரங்கில் திரையிடப்பட்டது. இத்திரைப்படம் ஒளி ஊடுருவக்கூடிய பட்டைகளில் வரையப்பட்ட படங்களினால் உருவாக்கப்பட்டதாகும். தனித்தனியாக வரையப்பட்ட 500 படங்களினால் பதினைந்து நிமிடங்கள் ஓடும்படி இப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. 1900-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திரைப்படத்தினை கண்டுகளித்திருந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Ronan, Colin A (1985). The Shorter Science and Civilisation in China: Volume 2. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-31536-4. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  2. http://www.youtube.com/watch?v=JgALlSPlZC8
  3. McLaughlin, Dan. "A RATHER INCOMPLETE BUT STILL FASCINATING". Film Tv. UCLA. பார்க்கப்பட்ட நாள் 12 பெப்பிரவரி 2013.

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயங்குபடம்&oldid=2220616" இலிருந்து மீள்விக்கப்பட்டது