வருமான வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18: வரிசை 18:


==வருமான வரி செலுத்துவதில் மூத்த குடிமகன்களுக்கு சலுகைகள்==
==வருமான வரி செலுத்துவதில் மூத்த குடிமகன்களுக்கு சலுகைகள்==
* அறுபது வயது நிரம்பிய மூத்த குடிமகன்களுக்கு ஆண்டு மொத்த வருமானம் ரூபாய் 2.50 இலட்சம் வரை உள்ளவர்களும், எண்பது வயது நிரம்பிய மிக மூத்த குடிமகன்களுக்கு ஆண்டு மொத்த வருமானம் ரூபாய் ஐந்து இலட்சம் வரை உள்ளவர்களும் வருமானவரி செலுத்த தேவையில்லை.<ref>http://www.iiserbhopal.ac.in/PDF/Income%20Tax%20on%20salaries%20FY%202013-14.pdf</ref>
அறுபது வயது நிரம்பிய மூத்த குடிமகன்களுக்கு ஆண்டு மொத்த வருமானம் ரூபாய் 2.50 இலட்சம் வரை உள்ளவர்களும், எண்பது வயது நிரம்பிய மிக மூத்த குடிமகன்களுக்கு ஆண்டு மொத்த வருமானம் ரூபாய் ஐந்து இலட்சம் வரை உள்ளவர்களும் வருமானவரி செலுத்த தேவையில்லை.<ref>http://www.iiserbhopal.ac.in/PDF/Income%20Tax%20on%20salaries%20FY%202013-14.pdf</ref>


==மொத்த வருமானம் கணக்கீடு செய்வதில் அரசின் சலுகைகள்==
==மொத்த வருமானம் கணக்கீடு செய்வதில் அரசின் சலுகைகள்==

12:42, 13 பெப்பிரவரி 2014 இல் நிலவும் திருத்தம்

வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும்.

இந்திய வருமானவரித் துறை

இந்திய வருமானவரி சட்டம், 1961-[1] இந்திய பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 01-04-1962 முதல் இந்திய வருமான வரித் துறை செயல்படத் தொடங்கியது. வருமான வரி கணக்கை சரிபார்த்தல் மற்றும் வசூலித்தல் ஆகியவற்றை இந்திய அரசின் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறை இந்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறையின், நேரடி வருவாய் வாரியத்தின் கீழ் இயங்குகிறது.[2]

இந்தியாவில் வருமான வரி படிவம் கட்டாயமாக தாக்கல் செய்ய கடமைப்பட்ட தனிநபர்கள்

  • நிதியாண்டில் இரண்டு இலட்சத்திற்கு மேல் அனைத்து இனங்கள் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள்.
  • நிதியாண்டில் ரூபாய் 50,000/-க்கு மேல் வங்கி/கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து வட்டி

ஈட்டுபவர்கள்.

  • நிதியாண்டில் 5 இலட்சமும் அதற்கு மேலும் தங்க நகைகள் மற்றும் தங்கத்தை வாங்குபவர்கள்.
  • கடன் அட்டை மூலம் ஆண்டிற்கு இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேலும் பொருட்களை கொள்முதல் செய்பவர்கள்.
  • ரூபாய் முப்பது இலட்சம் மற்றும் அதற்கு மேலும் மதிப்புடைய அசையாச் சொத்துக்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள்.
  • வங்கி சேமிப்பு கணக்கில் ரூபாய் பத்து இலட்சமும் அதற்கு மேற்பட்ட தொகை இருப்பாக வைத்திருப்பவர்கள்.
  • ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை பரஸ்பர நிதியில் முதலீடு செய்துள்ளவர்கள்.
  • ரூபாய் ஐந்து இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை பத்திரங்கள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்கள்.
  • ரூபாய் ஒரு இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள்.
  • ரூபாய் ஐந்து இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை இந்திய ரிசர்வ் வங்கியின் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளவர்கள்.

வருமான வரி செலுத்துவதில் மூத்த குடிமகன்களுக்கு சலுகைகள்

அறுபது வயது நிரம்பிய மூத்த குடிமகன்களுக்கு ஆண்டு மொத்த வருமானம் ரூபாய் 2.50 இலட்சம் வரை உள்ளவர்களும், எண்பது வயது நிரம்பிய மிக மூத்த குடிமகன்களுக்கு ஆண்டு மொத்த வருமானம் ரூபாய் ஐந்து இலட்சம் வரை உள்ளவர்களும் வருமானவரி செலுத்த தேவையில்லை.[3]

மொத்த வருமானம் கணக்கீடு செய்வதில் அரசின் சலுகைகள்

ஒரு தனிநபரின் மொத்த வருமானத்தை வருமான வரிக்காக கணக்கிடப்படும் பொழுது கீழ்கண்ட தொகைகள் கழித்த பிறகே வருமான வரிக்கான மொத்த வருவாய் கணக்கிடப்படும்.

  • வருமான வரி சட்டம் 80சி-இன்படி பொது வருங்கால வைப்பு நிதி, சிறப்பு வருங்கால வைப்பு நிதி, அஞ்சலக வருங்கால வைப்பு நிதி, காப்புறுதி சந்தா தொகை, வீட்டுவ்சதி கடனுக்கான அசல் தொகை, அதிக பட்சம் இரண்டு குழந்தைக்களுக்கான டியுசன் கட்டணம், ஐந்து வருட தேசிய சேமிப்பு பத்திரங்களில் வைப்புத் தொகை ஆகியவற்றின் கூட்டுதொகையில் அதிக பட்சம் ஒரு இலட்சம் ரூபாய ஒருவரின் மொத்த வருவாயிலிருந்து கழித்து மீதமுள்ள தொகைக்கு வருமானவரி கணக்கிடப்படும்.
  • வருமான வரி சட்டம் 80சிசிசி-இன் படி இந்திய காப்புறுதி நிறுவனத் (எல்.ஐ. சி)திடமிருந்து பெறும் ஓய்வூதிய காப்புறுதி திட்டத்திலிருந்து பெறும் தொகைக்கு ரூபாய் பத்தாயிரம் வரை மொத்த வருவாயிலிருந்து கழித்து மீதமுள்ள வருவாய்க்கு வரி கணக்கிடப்படும்.
  • வருமானவரிச் சட்டம் 80சிசிடி-இன் படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் செலுத்திய தொகைக்கு மொத்த ஊதியத்தில் பத்து விழுக்காடு வரை, மொத்த வருவாயிலிருந்து கழித்து மீதித் தொகைக்கு வருமான வரி கணக்கிடப்படும்.
  • வருமான வரிச் சட்டம் 80டி-இன் படி மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான செலுத்தும் சந்தா தொகை ரூபாய் 15,000/- வரையும், 65 வயது நிரம்பிய மூத்த குடிமகன்கள் செலுத்தும் சந்தா தொகை ரூபாய் 20,000/- வரையும் மொத்த வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.
  • வருமான வரிச் சட்டம் 80டிடி-இன் படி, ஒராண்டிற்கு ஏற்படும் மருத்துவ செலவில் ரூபாய் 50,000/- வரையில் மொத்த வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.




மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இந்திய வருமானவரித் துறையின் இணையதளம் http://www.incometaxindia.gov.in/home.asp

"https://ta.wikipedia.org/w/index.php?title=வருமான_வரி&oldid=1617530" இலிருந்து மீள்விக்கப்பட்டது