விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: zh,pl,fr,ko,es,oc,ms,lv,it,gl,et,de,ja,ml,vi,simple,sh,nl,sv,ar,hi,pt,eo,sk,ru,no,ca,fi,uk,nn,cs,az,lt
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: tr:Seçim#Nispi temsil sistemi
வரிசை 61: வரிசை 61:
[[sk:Pomerný volebný systém]]
[[sk:Pomerný volebný systém]]
[[sv:Proportionellt valsystem]]
[[sv:Proportionellt valsystem]]
[[tr:Seçim#Nispi temsil sistemi]]
[[uk:Пропорційна виборча система]]
[[uk:Пропорційна виборча система]]
[[vi:Đại diện tỷ lệ]]
[[vi:Đại diện tỷ lệ]]

05:42, 14 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை (proportional representation) என்பது ஒரு குறிப்பிட்ட தொகுதி மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகளில், வேட்பாளர்கள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு அமைய வெற்றியாளர்களைத் தெரிவு செய்யும் ஒரு தேர்தல் முறையாகும்.

நோக்கங்கள்

அளிக்கப்படும் வாக்குகளில் அதிகமான வாக்குகளைப் பெறுபவரைத் தேர்ந்தெடுக்கும் ஒற்றை உறுப்பினர் தொகுதித் தேர்தல் முறையில் உள்ள குறைபாடுகளை நீக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டதே இந்த முறையாகும். இம்முறை, பல்வேறு நாடுகளிலும் வேறுபட்ட முறைகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு வேறுபாடுகள் காணப்பட்டாலும், பின்வரும் அடிப்படையான கொள்கைகளில் ஒன்றுபட்டுள்ளன.

  1. எல்லா வாக்காளர்களும் நீதியான பிரதிநிதித்துவத்துக்கு உரிமையானவர்கள் என்பது.
  2. எல்லாக் கருத்துக்களும் அவற்றுக்குள்ள ஆதரவுக்கு விகிதாசாரமான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட உரிமை உடையவை என்பது.

இவற்றுடன், பல்வேறு விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைகளுக்கிடையே வேறும் பல ஒத்த இயல்புகள் காணப்படுகின்றன. அவற்றுட் சில:

  1. பல உறுப்பினர் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளமை.
  2. ஒவ்வொரு தேர்தல் தொகுதி அல்லது தேர்தல் மாவட்டங்களிலும் அளிக்கப்படும் வாக்குகளின் விகிதாசாரத்துக்கு அமைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படல்.

வகைகள்

தற்போது பல ஐரோப்பிய நாடுகளும், வளர்ந்து வருகின்ற வேறுபல நாடுகளும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையைப் பயன்படுத்தி வருகின்றன. நடைமுறையிலுள்ள முக்கியமான விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறைகள் பின்வருமாறு:

  1. கட்சிப் பட்டியல் முறை
    1. மூடிய கட்சிப்பட்டியல்
    2. திறந்த கட்சிப்படியல்
  2. கலப்பு உறுப்பினர் விகிதாசாரத் தேர்தல் முறை
  3. மாற்றப்படக்கூடிய ஒற்றை வாக்கு முறை.

இவற்றையும் பார்க்கவும்