சுற்றுக்காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: et:Sideeriline periood
சி தானியங்கி இணைப்பு: ms:Tempoh orbit
வரிசை 50: வரிசை 50:
[[mk:Орбитален период]]
[[mk:Орбитален период]]
[[mr:परिभ्रमण काळ]]
[[mr:परिभ्रमण काळ]]
[[ms:Tempoh orbit]]
[[nds:Ümlooptiet]]
[[nds:Ümlooptiet]]
[[nl:Omlooptijd (astronomie)]]
[[nl:Omlooptijd (astronomie)]]

15:10, 9 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சுற்றுக்காலம் (Orbital period) என்பது ஒரு கோள் (அல்லது ஏதேனும் ஒரு விண்பொருள்) தன் சுற்றுப்பாதையை முழுமையாய் சுற்றி வர ஆகும் கால அளவாகும்.

சூரியனைச் சுற்றி வரும் கோள்களுக்கு (அல்லது மற்ற விண்வெளிப் பொருள்களுக்கு) பலவகையான சுற்றுக்காலங்கள் உள்ளன.

  • விண்மீன்வழிச் சுற்றுக்காலம் (Sidereal orbital period) என்பது அப்பொருள் தன் சுற்றுப்பாதையில் முழுமையாய் ஒருமுறைச் சூரியனை சுற்றி வர ஆகும் கால அளவாகும், இது விண்மீன்களை சார்ந்து அளக்கப்படும். இதுவே ஒரு பொருளின் மெய்யான சுற்றுக்காலமாக கொள்ளப்படும்.
  • ஞாயிற்றுவழிச் சுற்றுக்காலம் (Synodic orbital period) என்பது பூமியிலிருந்து சூரியனை சார்ந்து அறியப்படும் (அப்பொருளின்) சுற்றுப்பாதையின் ஒரு புள்ளியை அப்பொருள் (தன் சுற்றில்) மீண்டும் அடைவதற்கான கால அளவாகும். இது பூமியிலிருந்து காணப்படும் அப்பொருளின் சுற்றுப்பாதையில் அப்பொருளின் சுற்றுக்காலமாகும். பூமியும் சூரியனை சுற்றுவதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான விண்மீன்வழிச் சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.
  • அண்மைநிலைச் சுற்றுக்காலம் (Anomalistic orbital period) என்பது தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிகவருகில் அப்பொருள் செல்லும் பகலவ குறைவிலக்கப் புள்ளியை அப்பொருள் அடுத்தடுத்து கடப்பதற்கு இடையிலானக் கால அளவு. அப்பொருளின் அரை-பெருமச்சின் (semi-major axis) சாய்வு சுழல்வதால் இக்கால அளவு அப்பொருளின் மெய்யான சுற்றுக்காலமான sidereal சுற்றுக்கால அளவிலிருந்து வேறுபடும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுற்றுக்காலம்&oldid=1255029" இலிருந்து மீள்விக்கப்பட்டது