சாவோ பாவுலோ (மாநிலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவோ பாவுலோ
Estado de São Paulo
மாநிலம்
சாவோ பாவுலோ மாநிலம்
சாவோ பாவுலோ-இன் கொடி
கொடி
சாவோ பாவுலோ-இன் சின்னம்
சின்னம்
குறிக்கோளுரை: Pro Brasilia Fiant Eximia (இலத்தீன்)
"பிரேசிலுக்கு மாபெரும் சாதனைகள் சாதிக்கப்படட்டும்"
பண்: பந்தெயிரான்டசு நாட்டுப்பண்
பிரேசிலில் சாவோ பாவுலோ மாநிலத்தின் அமைவிடம்
பிரேசிலில் சாவோ பாவுலோ மாநிலத்தின் அமைவிடம்
Country Brazil
(அரசியல்) மிகப்பெரும் நகரம்சாவோ பாவுலோ
அரசு
 • ஆளுநர்கெரால்டோ அல்க்மின் (PSDB)
 • துணை ஆளுநர்குயிகெர்மெ அஃபிஃப் டொமிங்கோசு
 • சட்டமன்றம்சாவோ பாவுலோ சட்டமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்2,48,209.4 km2 (95,834.2 sq mi)
பரப்பளவு தரவரிசை12வது
மக்கள்தொகை (2012)[1]
 • மொத்தம்41,901,219
 • தரவரிசைமுதலாவது
 • அடர்த்தி170/km2 (440/sq mi)
 • அடர்த்தி தரவரிசைமூன்றாவது
இனங்கள்Paulista
மொத்த உள்நாட்டு உற்பத்தி
 • Year2010 (IBGE)
 • TotalUS$614,579,311 (1st)[2]
 • Per capitaUS$15,322 (2nd)
HDI
 • Year2005
 • பகுப்பு0.851 – high (3rd)
நேர வலயம்BRT (ஒசநே-3)
 • கோடை (பசேநே)BRST (ஒசநே-2)
அஞ்சல் குறியீடு01000-000 to 19990-000
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுBR-SP
இணையதளம்http://www.saopaulo.sp.gov.br/

சாவோ பாவுலோ (São Paulo, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [sɐ̃w ˈpawlu]  ( கேட்க)) பிரேசிலின் மாநிலங்களில் ஒன்றாகும்.பிரேசிலிய பொருளியலில் முதன்மையானதொரு தொழில் மற்றும் வணிக மையமாக விளங்குகிறது. திருத்தூதர் பவுலின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள இந்த மாநிலம் நாட்டின் மிகக்கூடிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. பிரேசிலின் மிகவும் செல்வமிக்க மாநிலமாகவும் உள்ளது. மாநிலத்தின் பெயரிலேயே அமைந்துள்ள இதன் தலைநகரமான சாவோ பாவுலோ தென் அமெரிக்காவிலேயே (தென் கோளத்திலேயே கூட) மிகப் பெரும் நகரமாக விளங்குகிறது.

பிரேசிலின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33.9% இந்த மாநிலத்தின் பங்களிப்பு உள்ளது. மேலும் பிரேசிலின் மாநிலங்களிடையே மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் மூன்றாமிடத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாமிடத்திலும் குழந்தை இறப்பு வீதத்தில் இரண்டாமிடத்திலும் எழுத்தறிவில் நான்காமிடத்திலும் உள்ளது.

40 மில்லியன் மக்கள்தொகையுடைய இந்த மாநிலம் பிரேசிலின் மிகுந்த மக்கள்தொகையுடைய மாநிலமாகவும் தென் அமெரிக்காவிலேயே மூன்றாவது மிகுந்த மக்கள்தொகையுடைய அரசியல் நிலப்பிரிவாகவும் உள்ளது. மாநிலத் தலைநகரம் சாவோ பாவுலோ உலகின் மிகப் பெரும் நகராட்சிகளில் ஏழாமிடத்தில் உள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. [1]
  2. IBGE. Contas Regionais do Brasil - 2010: Tabela 1 - Produto Interno Bruto - PIB e participação das Grandes Regiões e Unidades da Federação - 2010. 2013-01-11
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவோ_பாவுலோ_(மாநிலம்)&oldid=1613040" இலிருந்து மீள்விக்கப்பட்டது