சாரீரப்பதன்
சாரீரப்பதன்(relative humidity) எனப்படுவது வளிமண்டலத்தில் காணப்படும் நீராவியின் அளவிற்கும் நிரம்பிய நிலை நீராவியளவிற்கும் இடையயிலான விகிதமாகும்.
வரைவிலக்கணம்
[தொகு]நீர்- வளி கொண்டகலவை ஒன்றின் சாரீரப்பதன் எனப்படுவது, குறித்த வெப்பநிலையில் அக்கலவையிலுள்ள நீராவியின் பகுதி அமுக்கத்திற்கும் நீராவியின் நிரம்பல் ஆவியமுக்கத்திற்கும் இடையிலான விகிதம் ஆகும்.
பின்வரும் சமன்பாட்டின் மூலம் சாரீரப்பதன் கணிக்கப்படும் . இது சதவீதத்தில் பொதுவாகத் தரப்படும்.[1]:
கணிப்பீடு
[தொகு]வளி நீர்க் கலவையொன்றின் ஈரக்குமிழ் வெப்பநிலை மற்றும் உலர் குமிழ் வெப்பநிலை என்பன தெரியுமாயின் சைக்குறேமற்றிக்(psychrometric) அட்டவணை மூலம் சாரீரப்பதனை நேரடியாகக் காணலாம்.
சாரீரப்பதனின் முக்கியத்துவம்
[தொகு]- காலநிலையைக் கட்டுப்படுத்துவதில் வெப்பநிலையையும் சாரீரப்பதனையும் கட்டுபப்டுத்துவதன் மூலம் கட்டிடங்கள், வாகனங்கள் போன்றவற்றில் தகுந்த சூழல் ஏற்படுத்தப்படுவதுடன் இயந்திரங்களிலும் செயற்பாடுகளிலும் தொழில்நுட்பத்திறன் பேணப்படுகிறது.
சுவாத்தியமான சூழல்
[தொகு]மனித உடல் தோலில் வியர்வை ஆவியாவதன் மூலம் குளிரூட்டப்படும் செயல்முறை கொண்டது. இதனால் ஈரமான வளிக்கு உணர்திறன் கொண்டது. ஈரமான் சூழலிலும் பார்க்க உலர் சூழலில் அதிக ஆவியாதல் முறையைக் காட்டும்.இதனால் சாரீரப்பதன் உயர்வாயுள்ள போது அதிக உஸ்னம் உணரப்படும்.[2].
எ.கா: வளிமண்டல வெப்பநிலை 24 °C (75 °F) இருக்கும் போது சாரீரப்பதன் பூச்சியமாக இருக்குமாயின் இவ் வெப்பநிலை 21 °C (69 °F) ஆக உணரப்படும்.[3]. இதே வெப்பநிலை சாரீரப்பதன் 100% ஆக இருக்கும் போது 27 °C (80 °F)ஆக உணரப்படும்.[3]
- வாகனங்களிலும் கட்டடங்களிலும் இதே நுட்பத்தைப் பயன்படுத்தியே வளிபதனப்படுத்துதல் செய்யப்படுகிது. இதே போல் சில செயற்பாடுகளுக்கு தேவைப்படுகின்ற விசேட இயக்க சூழல் சாரீரப்பதனைக் கட்டுப்படுத்துவதனாலேயே சாத்தியமாக்கப்படுகிறது.
உசாத்துணை
[தொகு]- ↑ Perry, R.H. and Green, D.W, Perry's Chemical Engineers' Handbook (7th Edition), McGraw-Hill, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049841-5 , Eqn 12-7
- ↑ http://curious.astro.cornell.edu/question.php?number=86
- ↑ 3.0 3.1 http://science.howstuffworks.com/question651.htm