உள்ளடக்கத்துக்குச் செல்

சாடில் சிகரம் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாடில் சிகரம் தேசியப் பூங்கா (Saddle Peak National Park) இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ளது. ஒரு தேசிய பூங்காவான இது 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1][2]

காலநிலை

[தொகு]

சாடில் சிகரம் தேசியப் பூங்காவின் பரப்பளவு 33 சதுர மைல்கள் அல்லது 85.47 சதுரகிலோமீட்டர்கள் ஆகும். குறிப்பாக கடல்சார்ந்த காலநிலை நிலவுகிறது. கோடை காலத்தில் 20-30 பாகை செல்சியசு வெப்பநிலை காணப்படுகிறது.[3] சூன் முதல் அக்டோபர் வரை இங்கு மழைக்காலமாகும்.[3]

விலங்குகள்

[தொகு]

அந்தமான் காட்டுப் பன்றி, அந்தமான் காட்டு மைனா, அந்தமான் இம்பீரியல் புறா, நீர் உடும்பு, ஓங்கில், திமிங்கிலம், உவர் நீர் முதலை போன்ற விலங்குகள் பூங்காவில் உள்ளன.[2][3]

தாவரங்கள்

[தொகு]

சாடில் சிகரம் தேசிய பூங்காவை சுற்றிலும் இருப்பது ஈரமான, வெப்பமண்டல தாவரங்கள் நிறைந்த இலையுதிர் காடுகள் ஆகும். சிகோலோபியா, கிளெசுடேந்தசு ரோபசுட்டசு போன்ற இந்தியாவில் காணப்படாத தாவரங்கள் இங்கு காணப்படுகின்றன.[4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bisht, R.S. (1995). National parks of India. New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India. p. 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8123001789.
  2. 2.0 2.1 Negi, S.S. (1993). Biodiversity and its conservation in India. New Delhi: Indus. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185182884.
  3. 3.0 3.1 3.2 Negi, S.S. (2002). Handbook of national parks, wildlife sanctuaries, and biosphere reserves in India (3rd rev. ed.). New Delhi: Indus Pub. Co. p. 52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8173871280.
  4. New Reports to the Flora of India from Saddle Peak National Park, North Andaman. Rheedea. Vol. 19 (1 & 2) 69-71. 2009