உள்ளடக்கத்துக்குச் செல்

சப்னம் நாசிமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்னம் நாசிமி
Shabnam Nasimi
பிறப்பு16 February 1991 (1991-02-16) (வயது 33)
காபுல், ஆப்கானித்தான்
தேசியம்ஐக்கிய இராச்சியம்
கல்விசட்டப் பல்கலைக்கழகம்
பெற்றோர்நூரல்லாக் நாசிமி
மகபூபா நாசிமி
உறவினர்கள்இராபியா நாசிமி, தாரியசு நாசிமி, சீகெபா நாசிமி
வலைத்தளம்
shabnamnasimi.co.uk

சப்னம் நாசிமி (Shabnam Nasimi) என்பவர் பிரிட்டிசு-ஆப்கான் சமூக ஆர்வலர் மற்றும் அரசியல் விமர்சகர் ஆவார். 1991 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஆப்கானித்தானின் பழமைவாத நண்பர்கள் அமைப்பின் நிர்வாக இயக்குநராக உள்ளார். ஐக்கிய இராச்சியத்துடன் ஆப்கானித்தான் குறித்த புரிதலையும் ஆதரவையும் இவ்வமைப்பு ஊக்குவிக்கிறது.

ஆப்கானித்தானில் தலிபான் ஆட்சியில் இருந்து தப்பித்து தனது குடும்பத்துடன் சப்னம் நாசிமி தனது எட்டு வயதில் இங்கிலாந்துக்கு வந்தார். ஆப்கானித்தான் மற்றும் பிற அகதிகளை பிரிட்டிசு சமுதாயத்தில் ஒருங்கிணைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்திற்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இவர் செலவழித்திருக்கிறார், புலம்பெயர்ந்த சமூகங்களிடையே முக்கிய பிரிட்டிசு மதிப்புகளை ஊக்குவித்தார் மற்றும் இவருடைய சமூகத்தின் ஓடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவினார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

1999 ஆம் ஆண்டு ஆப்கானித்தானில் தாலிபான் ஆட்சியை விட்டு வெளியேறிய பிறகு, நசிமியின் குடும்பம் ஆப்கானித்தானில் இருந்து இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்து வந்தது. நாசிமுடைய தந்தை நூரல்லக் நசிமி முன்னாள் சோவியத் யூனியனில் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றவராவார். சப்னத்தின் தாயார் மக்போபா சட்டத்தில் முதுநிலை பட்டப்படிப்பைப் படித்து முடித்திருந்தார். இவர்கள் குடும்பத்தினர் எல்லாவற்றிற்கும் மேலாக கல்வியை மதித்தனர்.[1]

இலண்டனில் உள்ள இங்கிலாந்து புனித சேவியர்சு மற்றும் புனித ஒலேவ் பேராலய பள்ளியில் நாசிம் 18 வரை சென்று உயர்நிலைக் கல்வியைக் கற்றார். திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் படித்த நாசிமி சட்டத்தில் பட்டம் பெற்றார். பிர்க்பெக் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய நிர்வாகம் மற்றும் சர்வதேச பாதுகாப்பில் முதுநிலை கல்வியை முடித்தார்.[2][3][4]

தொழில்

[தொகு]

2019 ஆம் ஆண்டு நாசிம் ஆப்கானித்தானில் பழமைவாத நண்பர்கள் என்ற அமைப்பை நிறுவினார்.[5]

டைம்சு,[6][7] புராசுபெக்ட்டு என்ற மாதப் பத்திரிகை, இணையதள பத்திரிகையான குயிலெட்டு மற்றும் பிரீ மார்க்கெட் கன்சர்வேடிவ் வலைத்தளங்கள், மற்றும் கன்சர்வேடிவ் ஓம் என்ற வலைப்பதிவு போன்ற பல்வேறு ஊடகங்களில் நாசிமி எழுதியுள்ளார்.[8] and the blog ConservativeHome.[9][10] நியூசுநைட்டு, பிபிசி நியூசு, ஐடிவி நியூசு, சேனல் 4 மற்றும் சேனல் 5 நியூசு உள்ளிட்ட பிற சர்வதேச ஊடகங்களில் பிரிட்டிசு அரசியல், வெளியுறவுக் கொள்கை, குடியேற்றம் மற்றும் சமூகம் பற்றிய கருத்துரை மற்றும் பகுப்பாய்வை வழங்க அரசியல் வர்ணனையாளராக நாசிமி தோன்றினார். இங்கிலாந்தில் இன சிறுபான்மை சமூகங்கள் மற்றும் பாலின சமத்துவம் முதலானவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் நாசிமியின் நடவடிக்கைகள் இருந்தன.[11]

விருதுகள்

[தொகு]

2019 ஆம் ஆண்டு பி.பி.சி வானொலி தேர்ந்தெடுந்த உலகின் சிறந்த 100 பெண்மணிகள் பட்டியலில் சப்னம் நாசிமியும் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12][13]

அரசியல் நடவடிக்கைகள்

[தொகு]

2019 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதைக் குறிக்கும் பிரெக்சிட்டு என்ற பரப்புரைக்கு எதிராக நாசிமி குரல் கொடுத்தார். இந்த நிலைப்பாடு, கலாச்சார வட்டாரங்களிலும் மற்றும் சிறுபான்மை இன மக்களிடமும் மிகவும் அந்நியமாக இருந்தது. நாசிமி இதற்காக சனநாயக வாக்கெடுப்பு முடிவை வலியுறுத்தினார். 2019 ஆம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சிக்கான தலைமைத் தேர்தலில் போரிசு ஜான்சனுக்கு ஆதரவாக இவர் ஒப்புதல் அளித்தார். "கருப்பு ஆசிய மற்றும் சிறுபான்மை இனத்தினர் என்று அழைக்கப்படுபவர்களின் வாக்குகளைப் பாதுகாக்கவும் இவர் பணியாற்றினார். 2019 பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் பிரச்சாரத் தலைமையகத்துடன் இணைந்து இங்கிலாந்தில் பிரிட்டிசு ஆப்கானித்தான் தொடர்பு மற்றும் ஈடுபாட்டிற்குத் தலைமை தாங்கினார். பழமைவாதிகளுக்கு தன் ஆதரவைக் கொடுத்தார்.[14][15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Nasimi, Shabnam. "I am a young woman from an ethnic minority — and a Tory". The Times. https://www.thetimes.co.uk/article/bme-voters-need-to-hear-the-tory-message-h8k3k0n9n. 
  2. Nasimi, Shabnam (6 March 2020). "Race is not the disadvantage it once was in the UK".
  3. "Shabnam Nasimi".
  4. ""I took my refugee status as an opportunity" – Shabnam's inspiring story | The Open University Law School". law-school.open.ac.uk.
  5. "Shabnam Nasimi: The young visionary you need to know leading Conservative Friends of Afghanistan". September 12, 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Nasimi, Shabnam. "Openness and control can rebuild confidence in immigration system". The Times. https://www.thetimes.co.uk/article/openness-and-control-can-rebuild-confidence-in-immigration-system-2ns2gc3nt. 
  7. Nasimi, Shabnam. "This election has destroyed the narrative linking Brexit and racism". The Times. https://www.thetimes.co.uk/article/this-election-has-destroyed-the-narrative-linking-brexit-and-racism-86wbqwmnm. 
  8. Shabnam Nasimi at Free Market Conservatives retrieved 20 March 2021
  9. "Shabnam Nasimi: From refugee to Tory activist and campaigner. Why I am a Conservative". Conservative Home.
  10. "Shabnam Nasimi: The Conservative Manifesto must include measures to grapple with online extremism". Conservative Home. Archived from the original on 2021-09-03. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
  11. Nasimi, Shabnam. "Shabnam Nasimi – 24plusnews.co.uk". Archived from the original on 2020-06-04. பார்க்கப்பட்ட நாள் 2021-09-03.
  12. "برنامه ویژه صد زن تلویزیون فارسی بی‌بی‌سی: زنان و دنیای سیاست". 20 October 2019.
  13. "صد زن".
  14. Coles, Olivia. "Election 2019: what do young activists make of the campaign?". The Times. https://www.thetimes.co.uk/article/election-2019-what-do-young-activists-make-of-the-campaign-2hxj3ggjm. 
  15. "The Debate - Last of the Tory prime ministers? Boris Johnson's bid to revive UK Conservatives". France 24. June 20, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சப்னம்_நாசிமி&oldid=3857644" இலிருந்து மீள்விக்கப்பட்டது