சபீர்பாய் கப்லிவாலா
சபீர்பாய் கப்லிவாலா Sabir Kabliwala | |
---|---|
குசராத்து சட்டமன்றம் | |
பதவியில் 2007–2012 | |
பின்னவர் | பூசன்பட்டு |
தொகுதி | இயமல்பூர்-காடியா சட்டமன்றத் தொகுதி |
குசராத்து அனைத்திந்திய மச்லிசே இத்திகாதுல் முசுலிமீன் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சனவரி 1964 இயமல்பூர், குசராத்து |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அனைத்திந்திய மச்லிசே இத்திகாதுல் முசுலிமீன் |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
பெற்றோர் | அப்துல்கரீம் |
வேலை | அரசியல்வாதி |
சபீர்பாய் கப்லிவாலா (Sabirbhai Kabliwala) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சபீர் கப்லிவாலா, சபீர் கெடவாலா என்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். 1964 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் தேதியன்று இயமால்பூரில் இவர் பிறந்தார். குசராத்து மாநிலத்தைச் சேர்ந்த இவர் குசராத் சட்டமன்றத்தின் இயமால்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சபீர் கப்லிவாலா குசராத்து மாநிலத்தின் இயமால்பூரில் ஒரு முசுலீம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் அப்துல்கரீம் என்பதாகும். கப்லிவாலாவின் வாழ்க்கைத் துணைவியின் தொழில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதாகும்.
அரசியல்
[தொகு]கபிவாலா 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற குசராத்து மாநில சட்டமன்ற தேதலில் இந்திய தேசிய காங்கிரசுன்கட்சியின் உறுப்பினராகப் போட்டியிட்டு 44,870 மொத்த வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sabirbhai Kabliwala(Indian National Congress(INC)):Constituency- JAMALPUR – KHADIA(AHMEDABAD) – Affidavit Information of Candidate". myneta.info.
- ↑ "Jamalpur Gujarat Assembly Election 2007 – Latest News & Results". பார்க்கப்பட்ட நாள் 29 November 2020.