உள்ளடக்கத்துக்குச் செல்

சனாவுல்லா பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனாவுல்லா பட்
பிறப்பு(1922-11-14)14 நவம்பர் 1922
இறப்பு25 நவம்பர் 2009(2009-11-25) (அகவை 87)
ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவன, ஜம்மு மற்றும் காஷ்மீர், இந்தியா
பணிபத்திரிகையாள
குறிப்பிடத்தக்க படைப்புகள்டெய்லி அஃப்தாப்

சனாவுல்லா பட் ( Sanaullah Bhat;14 நவம்பர் 1922 - 25 நவம்பர் 2009), கவாஜா சனாவுல்லா பட் என்றும் அழைக்கப்படும் இவர், [1] ஒரு இந்திய பத்திரிகையாளரும், எழுத்தாளரும் உருது மொழியின் கட்டுரையாளரும் ஆவார். இவர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் டெய்லி அஃப்தாப் என்ற நாளிதழைத் தொடங்கி அதன் நிறுவன ஆசிரியராக பணியாற்றினார். காஷ்மீரில் பத்திரிகையின் முன்னோடியாகவும் தந்தையாகவும் அறியப்படுகிறார். அஹ்த் நமா-யி காஷ்மீர் உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

சனாவுல்லா பட் 14 நவம்பர் 1922 இல் பிறந்தார் 1952 ஆம் ஆண்டு ஆசாத் காஷ்மீரில் இருந்து காஷ்மீர் என்ற வாராந்திர செய்தித்தாளை வெளிட்டு தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கினார். 1957 ஆம் ஆண்டில், இவர் அஃப்தாப், [2] என்ற தினசரி உருது மொழி செய்தித்தாளில் கிசர் சோச்தா ஹை வுலர் கே கினாரே என்ற தலைப்பில் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கினார். 1965 இல் இந்தியாவின் செய்தித்தாள்களின் பதிவாளரிடம் செய்தித்தாளைப் பதிவுசெய்தார். ஜம்மு மற்றும் காஷ்மீரில் மாற்று அச்சடிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் நபர் ஆவார். [2] [3]

சனாவுல்லா 40 ஆண்டுகளுக்கும் மேலாக அஃப்தாப்பை தொகுத்து வந்தார். மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் புகைப்பட ஊடகவியலை அறிமுகப்படுத்தினார். இவர் காஷ்மீரில் பத்திரிகைகளின் தந்தை என்று வர்ணிக்கப்படுகிறார். 25 நவம்பர் 2022 அன்று, இவருக்கு அஞ்சலி செலுத்தும் போது, பாரூக் அப்துல்லா, "பட் புறநிலை இதழியலில் அர்ப்பணிப்புடன் இருந்தார். மேலும் இவர் செய்தித்தாள்களின் தெரு விற்பனையை அறிமுகப்படுத்தியவர்" என்று கூறினார். அதே நேரத்தில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காஷ்மீரில் பத்திரிகையின் முன்னோடி என்று இவரை விவரித்தார். 1975 இல், பட் காஷ்மீர் பத்திரிக்கைச் சங்கத்தின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இறப்பு

[தொகு]

சனாவுல்லா பட் 25 நவம்பர் 2009 அன்று சிறிநகரின் சௌராவில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இறந்தார்.[2]

வெளியீடுகள்

[தொகு]

இவரது படைப்புகளில் பின்வருவன அடங்கும்: [4]

சான்றுகள்

[தொகு]
  1. "Khawaja Sonaullah Bhat passes away in Srinagar". Indian Express. 25 November 2009. https://indianexpress.com/article/india/india-others/khawaja-sonaullah-bhat-passes-away-in-srinagar/. 
  2. 2.0 2.1 2.2 "Khawaja Sonaullah Bhat passes away in Srinagar". Indian Express. 25 November 2009. https://indianexpress.com/article/india/india-others/khawaja-sonaullah-bhat-passes-away-in-srinagar/. 
  3. Showkat, Nayeem (October–December 2020). "Mapping the Mediasphere in Jammu & Kashmir". SAGE Open 10: 4. doi:10.1177/2158244020968076. 
  4. "Baṭ, S̲anāʼullāh 1922-". WorldCat. பார்க்கப்பட்ட நாள் 23 January 2023.

மேலும் படிக்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சனாவுல்லா_பட்&oldid=3662825" இலிருந்து மீள்விக்கப்பட்டது