சந்தை சமநிலை விலை
ஒரு பொருளாதாரத்தில் விலையை நிர்ணயிப்பது அந்த சந்தையில் நிலவும் தேவையும் ( Demand) அளிப்பும்(Supply) தான்.
தேவை ஒரு குறிப்பிட்ட காலத்தில்,ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட விலையில், ஒரு குறிப்பிட்ட சந்தையில் எவ்வளவு வாங்கப்படுகிறது என்பதை காட்டுகிறது. மற்றவை மாறாமல் இருந்தால் ஒரு பொருளின் விலை அதிகரிக்க அதிகரிக்க அந்த பொருளின் தேவை குறையும். ஒரு பொருளின் விலை குறைய குறைய அதன் தேவை அதிகரிக்கும். விலைக்கும் தேவைக்கும் இடையே இருக்கும் தலைகீழ் தொடர்பை இவ்விதி விளக்குகிறது.
அளிப்பு ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட விலையில் எவ்வளவு அளிப்பவர்களால் விருப்பதோடு கொடுப்பதை காட்டுகிறது.
சந்தை சமநிலை விலை (Equilibrium Price)
[தொகு]ஒரு சந்தையில் தேவையும் அளிப்பும் சமமாக உள்ளநிலையில் உள்ள விலையை சந்தை சமநிலை விலை என்கிறோம். இங்கு தேவையும் அளிப்பும் சமமாக உள்ளது. நுகர்வோர்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை பெறுகின்றனர்.அளிப்பவர்கள் இங்கு நியாயமான இலாபத்தை பெறுகின்றனர்.இங்கு தேவைக் கோடும் அளிப்புக் கோடும் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்கிறது.
சந்தை சமநிலை விலை நிர்ணயம் செய்யும் பட்டியல்
[தொகு]பேனாவின் விலை(ரூபாயில்) | தேவைப்படும் அளவு (டஜன்களில்) | அளிக்கப்படும் அளவு (டஜன்களில்) |
---|---|---|
7 | 10 | 40 |
6 | 15 | 30 |
5 | 20 | 20 (சந்தை சமநிலை விலை) |
4 | 30 | 15 |
3 | 40 | 10 |
மேற்கண்ட பட்டியல் எவ்வாறு சந்தை சமநிலை விலை நிர்ண்யம் செய்யப்படுகிறது என்பதை காட்டுகிறது. விலை ரூ 7ல் சந்தை சமநிலை விலை நிர்ணயம் ஆகாது. ஏனென்றால் இங்கு அளிப்பு தேவையை விட அதிகமாகயுள்ளது. அதாவது நுகர்வோர் இந்த விலையில் வாங்க தயாராக இல்லை. மற்றும் இங்கு உற்பத்தியாளர்கள் நஷ்டத்தை அடைவதால் இங்கு விலை நிர்ணயமாகாது. விலை ரூ 6ல் விலை நிர்ணயம் ஆகாது. விலை ரூ 6 ஆக குறைந்ததால் தேவை அதிகரிக்கிறது. இது விலை குறைய குறைய தேவை அதிகரிக்கிறது என்பதை காட்டுகிறது.ஆனால் அளிப்பு விலை குறைய குறைய அளிப்பு குறையும் என்பதை காட்டுகிறது. இங்கும் விலை நிர்ணயம் ஆகாது.
ரூ 5ல் சந்தை சமநிலை விலை நிர்ணயம் செய்யப்படும். இங்கு தேவையும் அளிப்பும் சமமாக இருக்கிறது. விலை ரூ4ல் விலை நிர்ணயம் ஆகாது ஏனென்றால் இங்கு தேவை அதிகமாகவும் அளிப்பு குறைவாக இருக்கிறது. அதாவது விலை உயர்ந்தாலும் நுகர்வோர்கள் பொருட்களை வாங்க தயாராக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. அளிப்பவர்களூம் விலை உயர்ந்தால் இலாபம் அதிகரிக்கும் என்பதால் பொருட்களை அதிகரிக்க தயாராக இருக்கிறார்கள். எனவே ரூ5ல் தான் சந்தை சமநிலை விலை நிர்ணயம் ஆகும்.