கோவா விரைவுவண்டி
கோவா எக்ஸ்பிரஸ் Goa Express | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அதிவிரைவுத் தொடருந்து |
நிகழ்நிலை | இயக்கத்தில் |
நிகழ்வு இயலிடம் | கோவா, கர்நாடகம், மகாராட்டிரம், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் & தில்லி |
நடத்துனர்(கள்) | தென்மேற்கு ரயில்வே |
வழி | |
தொடக்கம் | வாஸ்கோடகாமா (VSG) |
இடைநிறுத்தங்கள் | 18 |
முடிவு | ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம் (NZM) |
ஓடும் தூரம் | 2202 கிமீ |
சராசரி பயண நேரம் | 39 மணி, 25 நிமிடம் |
சேவைகளின் காலஅளவு | நாள்தோறும் |
தொடருந்தின் இலக்கம் | 12779 / 12780 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி (2), மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி (3), ஸ்லீப்பர் (11), பொது (3) |
இருக்கை வசதி | உள்ளது |
படுக்கை வசதி | உள்ளது |
உணவு வசதிகள் | உள்ளது |
சுமைதாங்கி வசதிகள் | உள்ளது |
தொழில்நுட்பத் தரவுகள் | |
பாதை | அகலப்பாதை |
வேகம் | சராசரியாக - 55கிமீ/மணி |
கோவா விரைவுவண்டி இந்திய ரயில்வேயால் நாள்தோறும் இயக்கப்படும் அதிவிரைவு ரயில்சேவை ஆகும். இது வாஸ்கோடகாமாவையும் புது தில்லியிலுள்ள ஹசரத் நிசாமுதீன் நிலையத்தையும் இணைக்கிறது. தலைநகரங்களை புது டெல்லியுடன் இணைக்கும் ரயில்சேவைகளான கர்நாடக விரைவுவண்டி, ஆந்திரப் பிரதேச விரைவுவண்டி போன்றவற்றைப் போலவே இதுவும் செயல்படுகிறது. கோவாவின் பஞ்சிம் இடத்திற்கு அருகிலுள்ள ரயில்வே தலைமையகம் வாஸ்கோடகாமா (VSG) ஆகும்.[1]
வரலாறு
[தொகு]1987 ஆம் காலகட்டத்தில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுக காலகட்டத்தில் 2479/2480 என்ற எண்கள் வழங்கப்பட்டன. இதை பராமரிக்கும் பொறுப்பு வடக்கு ரயில்வேயின் டெல்லி பிரிவிடம் இருந்தது. தற்போது தென்மேற்கு ரயில்வேயுடன் இணைந்துள்ள இந்த ரயில் ஹப்ளி ரயில்வே பிரிவால் பராமரிக்கப்படுகிறது. தற்போது 12779/12780 என்ற எண்ணுடன் இயக்கப்படுகிறது.[2][3]
இடவசதிகள்
[தொகு]2 ஏசி 2-டையர், 3 ஏசி 3-டையர், 11 படுக்கை வகுப்புகள், 3 முன்பதிவற்ற பொதுப் பெட்டிகள், 1 பாண்ட்ரி கார், 2 பளுவிற்கான/மூட்டைகளுக்கான பகுதி (ரயில்வேயின் தபால் சேவை மற்றும் பாதுகாப்பாளர்களுக்கான பகுதி) என மொத்தமாக 22 பெட்டிகள் உள்ளன. சில வேளைகளில் அதிகமாக 1 ஏசி 3-டையர் BX1 என்ற பெயருடன் ரயிலில் இணைக்கப்படும். அதனால் ஒரு சில வேளைகளில் 23 பெட்டிகளைக் கொண்டிருக்கும்.[4]
வழிப்பாதை
[தொகு]மார்கோ, லோண்டா, பெல்கம், மிராஜ், சங்க்லி, சடரா, புனே, தாவுத், மண்மட், புசவால், இடராசி, போபால், ஜான்சி, குவாலியர், ஆக்ரா மற்றும் மதுரா வழியே இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதன் பயண நேரமான 39 மணி 25 நிமிடங்களில், 2202 கிலோமீட்டரைக் கடக்கிறது. கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களின் வழியாக செல்லும் இந்த ரயில் ராஜஸ்தான் மாநிலத்தின் தால்பூர் நிலையத்தின் வழியாக நிறுத்தமின்றி செல்கிறது.
வழித்தடமும் நிறுத்தங்களுக்கான நேரமும்
[தொகு]எண் | நிலையத்தின் பெயர் (குறியீடு) | வரும் நேரம் | புறப்படும் நேரம் | நிற்கும் நேரம் (நிமிடங்கள்) |
கடந்த தொலைவு (கி.மீ) |
நாள் | பாதை |
---|---|---|---|---|---|---|---|
1 | எச் நிசாமுதீன் (NZM) | தொடக்கம் | 15:00 | 0 | 0 | 1 | 1 |
2 | மதுரா சந்திப்பு (MTJ) | 16:42 | 16:44 | 2 | 134 | 1 | 1 |
3 | ஆக்ரா கன்டோன்மெண்ட் (AGC) | 17:45 | 17:50 | 5 | 188 | 1 | 1 |
4 | குவாலியர் (GWL) | 19:30 | 19:35 | 5 | 306 | 1 | 1 |
5 | ஜான்சி சந்திப்பு (JHS) | 21:10 | 21:22 | 12 | 403 | 1 | 1 |
6 | போபால் சந்திப்பு (BPL) | 01:10 | 01:15 | 5 | 694 | 2 | 1 |
7 | இடாரசி சந்திப்பு (ET) | 02:45 | 02:50 | 5 | 786 | 2 | 1 |
8 | காண்டவா (KNW) | 05:30 | 05:35 | 5 | 969 | 2 | 1 |
9 | புசாவள் சந்திப்பு (BSL) | 07:10 | 07:30 | 20 | 1093 | 2 | 1 |
10 | ஜள்காவ் சந்திப்பு (JL) | 07:53 | 07:55 | 2 | 1117 | 2 | 1 |
11 | மன்மாட் சந்திப்பு (MMR) | 09:45 | 09:50 | 5 | 1277 | 2 | 1 |
12 | கோபர்காவ் (KPG) | 10:58 | 11:00 | 2 | 1319 | 2 | 1 |
13 | பேலாப்பூர் (BAP) | 11:38 | 11:40 | 2 | 1363 | 2 | 1 |
14 | அஹமத்நகர் (ANG) | 12:47 | 12:50 | 3 | 1430 | 2 | 1 |
15 | தாவுத் சந்திப்பு (DD) | 14:45 | 15:00 | 15 | 1514 | 2 | 1 |
16 | புனே சந்திப்பு (PUNE) | 16:20 | 16:35 | 15 | 1589 | 2 | 1 |
17 | சாத்தாரா (STR) | 19:15 | 19:20 | 5 | 1734 | 2 | 1 |
18 | கராட் (KRD) | 20:18 | 20:20 | 2 | 1793 | 2 | 1 |
19 | சாங்க்லி (SLI) | 21:27 | 21:30 | 3 | 1861 | 2 | 1 |
20 | மிரஜ் சந்திப்பு (MRJ) | 22:25 | 22:30 | 5 | 1868 | 2 | 1 |
21 | ராய்பாக் (RBG) | 23:13 | 23:15 | 2 | 1919 | 2 | 1 |
22 | கடபிரபா (GPB) | 23:43 | 23:45 | 2 | 1948 | 2 | 1 |
23 | பெல்காம் (BGM) | 00:45 | 00:50 | 5 | 2006 | 3 | 1 |
24 | லோண்டா சந்திப்பு (LD) | 02:05 | 02:15 | 10 | 2057 | 3 | 1 |
25 | கேஸ்டில் ராக் (CLR) | 03:00 | 03:10 | 10 | 2081 | 3 | 1 |
26 | குலேம் (QLM) | 04:35 | 04:40 | 5 | 2140 | 3 | 1 |
27 | சான்வெர்தம் சச் (SVM) | 05:03 | 05:05 | 2 | 2158 | 3 | 1 |
28 | மட்காவ் (MAO) | 05:40 | 05:45 | 5 | 2174 | 3 | 1 |
29 | வாஸ்கோடகாமா (VSG) | 06:30 | 00:00 | 1050 | 2202 | 3 | 1 |
30 | லோண்டா சந்திப்பு (LD) | 02:05 | 03:45 | 100 | 2057 | 3 | 2 |
31 | அல்நாவர் சந்திப்பு (LWR) | 04:18 | 04:20 | 2 | 2090 | 3 | 2 |
32 | தார்வார் (DWR) | 05:25 | 05:27 | 2 | 2127 | 3 | 2 |
33 | ஹூப்ளி சந்திப்பு (UBL) | 06:25 | முடிவு | 0 | 2147 | 3 | 2 |
மாற்றுவழி இயக்கம்
[தொகு]கோவா எக்ஸ்பிரஸ் கீழ்க்கண்ட மூன்று இடங்களில் அதன் திசையினை மாற்றிக்கொள்கிறது.
- லோண்டா சந்திப்பு
- புனே சந்திப்பு
- தாவுத் சந்திப்பு
குறிப்புகள்
[தொகு]- ↑ "Goa express". erail.in.
- ↑ "12779 GOA EXPRESS Vasco Da Gama - H Nizamuddin". indianrailinfo.com.
- ↑ "12780 GOA EXPRESS H Nizamuddin - Vasco Da Gama". cleartrip.com. Archived from the original on 2014-07-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-30.
- ↑ "12780 GOA EXPRESS". erail.in. 2013-05-23.