கோட்டான் கோட்டான்
Appearance
கோட்டான் கோட்டான் என்பது சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று. தன்பக்கம் ஆளை இழுத்துக்கொள்வது இந்த விளையாட்டு. இதில் ஒரு வட்டம் வரையப்பட்டிருக்கும். வட்டத்துக்குள் சிலரும் வெளியே ஒருவரும் இருப்பர்.
உரையாட்டுப் பாடல் நிகழும்:
வெளியே இழுப்பவர் | உள்ளே இருப்பவர்கள் | விளக்கம் |
---|---|---|
கோட்டான் கோட்டான் | கோட்டுக்குள்ளே | - |
எத்தனை பேர் | 10 பேர் | உள்ளே இருப்பவரின் எண்ணிக்கை |
அவனை அடி, இவனை அடி, | முருகனையும் சேர்த்து அடி | முருகன் வெளியே இருப்பவருக்குக் கை கொடுப்பார். வெளியே இருப்பவர் முருகனை இழுக்கவேண்டும். உள்ளே இருப்பவர் முருகனைக் கோட்டுக்கு வெளியே இழுக்க விடாமல் தன் பக்கம் இழுப்பர் |
கோட்டுக்கு வெளியே வந்துவிட்டால் இழுப்பவருக்குத் துணை புரிய வேண்டும்.
இழுப்பவர் வட்டத்துக்குள் சென்றுவிட்டால் அவர் ஆட்டத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படுவார்.
எல்லாரும் கோட்டுக்கு வெளியே இழுக்கப்பட்டுவிட்டால் மறு ஆட்டம்.
மேலும் பார்க்க
[தொகு]கருவிநூல்
[தொகு]- இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980