கோட்டான் கோட்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒருவர் இழுத்தல்
பலர் சேர்ந்து இழுத்தல்

கோட்டான் கோட்டான் என்பது சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று. தன்பக்கம் ஆளை இழுத்துக்கொள்வது இந்த விளையாட்டு. இதில் ஒரு வட்டம் வரையப்பட்டிருக்கும். வட்டத்துக்குள் சிலரும் வெளியே ஒருவரும் இருப்பர்.

உரையாட்டுப் பாடல் நிகழும்:

வெளியே இழுப்பவர் உள்ளே இருப்பவர்கள் விளக்கம்
கோட்டான் கோட்டான் கோட்டுக்குள்ளே -
எத்தனை பேர் 10 பேர் உள்ளே இருப்பவரின் எண்ணிக்கை
அவனை அடி, இவனை அடி, முருகனையும் சேர்த்து அடி முருகன் வெளியே இருப்பவருக்குக் கை கொடுப்பார். வெளியே இருப்பவர் முருகனை இழுக்கவேண்டும். உள்ளே இருப்பவர் முருகனைக் கோட்டுக்கு வெளியே இழுக்க விடாமல் தன் பக்கம் இழுப்பர்

கோட்டுக்கு வெளியே வந்துவிட்டால் இழுப்பவருக்குத் துணை புரிய வேண்டும்.
இழுப்பவர் வட்டத்துக்குள் சென்றுவிட்டால் அவர் ஆட்டத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்படுவார்.

எல்லாரும் கோட்டுக்கு வெளியே இழுக்கப்பட்டுவிட்டால் மறு ஆட்டம்.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டான்_கோட்டான்&oldid=981949" இலிருந்து மீள்விக்கப்பட்டது