கோ. சுப்பிரமணியன்
கோ. சுப்பிரமணியன் (அக்டோபர் 7, 1906 - ஆகத்து 28, 1971) என்பவர் வழக்கறிஞராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் இருந்து தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளார். சைவ சமய நூல்கள் பலவும் இயற்றியுள்ளார்.
பிறப்பும் இளமையும்
[தொகு]இவர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிந்துப்பூந்துறையில் 07-10-1906 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் கோமதிநாயகம் பிள்ளை உலகாம்பாள் ஆகியோர் ஆவர். நெல்லை, உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், இந்துக் கல்லூரி, புனித சேவியர் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர், சென்னை சட்டக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
தமிழ்ப் பணிகள்
[தொகு]தமிழின் மீது பற்றுக்கொண்ட இவர், தாம் ஆற்றிய வழக்கறிஞர் தொழிலைத் துறந்து, தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றார். தமிழிலக்கியத்தில் வரலாற்றுச் செய்திகள் எனும் கட்டுரையை எழுதி அனைவரின் பாராட்டையும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சண்முகம் செட்டியாரின் விருப்பத்திற்கிணங்க, தமிழாராய்ச்சித் துறை ஒன்றைத் தனியே ஏற்படுத்தி அதற்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
படைப்புகள்
[தொகு]- அப்பர் விருந்து
- இளங்கோ விருந்து
- கம்பர் விருந்து
- மாணிக்க விருந்து
- இலக்கியச் செல்வம்
- இன்ப வாழ்வு
- துள்ளி வருகுதுவேல்
- கவி இன்பம்
- முத்தமிழ் முழக்கம்
- வாலி வதை
- வெண்ணிலவில்
- புதுமனைப் பரிசு
- வாசகரும் வாகீசரும் முதலிய தமிழ் நூல்களையும்,
- சைவ சித்தாந்த அகமும் வரலாறும்
- பழந்தமிழர் வாழ்வில் சகுனங்களும் நம்பிக்கைகளும்
- மரபு வழிபாடும் நாக வணக்கமும். முதலிய ஆங்கில நூல்களையும் படைத்துள்ளார்.
பெற்ற பட்டங்கள்
[தொகு]இவருக்குத் தருமபுரம் ஆதீனம், திருநின்ற நெறியாளர் எனும் பட்டத்தை வழங்கியுள்ளது. மதுரை ஆதீனம், சைவப் பேராசிரியர் எனும் பட்டத்தை வழங்கியுள்ளது.
மறைவு
[தொகு]இவர் தமது 65 ஆவது அகவையில் 26-8-1971 அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.
உசாத்துணை
[தொகு]1) மு.விவேகானந்தன், " தமிழ் வளர்த்த வழக்கறிஞர்கள்" நர்மதா பதிப்பகம், சென்னை-2017. 2) மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு சாகித்திய அகாதெமி வெளியீடு 1991.