உள்ளடக்கத்துக்குச் செல்

கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
കൊച്ചിന്‍ യൂനിവേഴ്‌സിറ്റി ഓഫ് സയന്‍സ് ആന്റ് ടെക്‌നോളജി
குறிக்கோளுரை"May learning illuminate us both, the teacher and the taught"
வகைஅரசு நிறுவனம்
உருவாக்கம்1971
வேந்தர்பாரூக் மரைக்காயர்
துணை வேந்தர்இராமச்சந்திரன் தெக்கேடத்து
பட்ட மாணவர்கள்2000 (2005)
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்500
அமைவிடம், ,
வளாகம்நகரம் சார் பகுதி
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) UGC
இணையதளம்www.cusat.ac.in

கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Cochin University of Science and Technology, CUSAT) 1971 இல் கொச்சி, கேரளம், இந்தியாவில் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சிப் பலகலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் பொறியியல், அறிவியற் சார்ந்த இணைப்படிப்புகளில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களை வழங்கிவருகிறது. இப்பல்கலைக்கழகம் மொத்தம் மூன்று வளாகங்களை உள்ளடக்கியது: அதில் இரண்டு கொச்சியிலும் மற்றொன்று குட்டநாடு, ஆலப்புழாவிலும் (66 கிமீ. தாண்டி) உள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் இரண்டாயிரம் மாணவர்களுக்கும் மேல் இளநிலை முதுநிலைப் பட்டங்களில் பயின்றும் வருகின்றனர்.

வெள்ளோட்டம்

[தொகு]

கொச்சின் பல்கலைக்கழகம் என அறியப்பட்ட இக்கல்வி நிலையம் 1971 இல் கேரள அரசு முதுநிலைப் படிப்பை ஊக்குவிக்கும் விதமாக சட்டப்பூர்வமாக நிறுவியது. பிப்ரவரி 1986 இல் இது கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மாற்றியமைக்கப்பட்டது (Cochin University of Science and Technology - CUSAT). இதன் மையக் குறிக்கோளாக இளநிலை, முதுநிலை, மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், மேலாண்மை, சமூக வளர்ச்சியில் மேம்பட்ட ஆய்வுகளை நோக்கியமைக்கப்பட்டது.

இதில் சேர்க்கை பல்கலைக்கழகம் நடத்தும் அனைத்திந்திய நுழைவுத்தேர்வான பொது சேர்க்கை தேர்வு (Common Admission Test - CAT) வாயிலாகவும், அல்லது துறை சார் நுழைவுத்து தேர்வு வாயிலாகவும் (Departmental Admission Tests - DAT) நடைபெறுகிறது.

வளாகங்கள்

[தொகு]

கொச்சிப் பல்கலைக்கழகம் மூன்று வளாகங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

  1. த்ரிக்காக்கரா வளாகம், தெற்கு களமச்சேரி - The Main (Thrikkakara) Campus, South Kalamassery
  2. ஏரிக்கரை வளாகம், கொச்சின் - The City (Lakeside) Campus, Cochin city
  3. புலிங்குண்ணு வளாகம், குட்டநாடு, ஆலப்புழா - The Pulinkunnu Campus, Kuttanad, Alappuzha

பிரிவுகள்

[தொகு]

1. அறிவியற் கல்விச்சாலை (Faculty of Science)

  • பயனுறு வேதியற் துறை (Department of Applied Chemistry)
  • இயற்பியற் துறை (Department of Physics)
  • கணிதத்துறை (Department of Mathematics)
  • புள்ளியியற் துறை (Department of Statistics)

2. தொழில்நுட்பக் கல்விச்சாலை (Faculty of Technology)

  • மின்னனுவியற் துறை (Department of Electronics)
  • கருவியியற் துறை (Department of Instrumentation)
  • பலபடி அறிவியல் மற்றும் இழுவைத் தொழில்நுட்பத்துறை (Department of Polymer Science and Rubber Technology)
  • கப்பற் தொழில்நுட்பத்துறை (Department of Ship Technology)
  • பன்னாட்டு ஒளியனியற் கல்விக்கூடம் (International School of Photonics)
  • கணினிப் பயன்பாட்டுத் துறை (Department of Computer Applications)
  • கணினி அறிவியற் துறை (Department of Computer Science)

3. பொறியியற் கல்விச்சாலை (Faculty of Engineering)

  • பொறியியற் கல்விக்கூடம், திரிக்காக்கரா (School of Engineering, Thrikkakara)
  • கொச்சிப் பல்கலைக்கழக பொறியியற் கல்லூரி, குட்டநாடு (Cochin University College of Engineering Kuttanad)

4. சுற்றுச்சூழலியற் கல்விச்சாலை (Faculty of Environmental Studies)

5. மானுடவியற் கல்விச்சாலை (Faculty of Humanities)

6. சட்டப் கல்விச்சாலை (Faculty of Law)

  • சட்டவியற் கல்விக்கூடம் (School of Legal Studies)

7. கடலறிவியற் கல்விச்சாலை (Faculty of Marine Sciences)

8. மருத்துவ அறிவியல் மற்றும் தொழிநுட்பக் கல்விச்சாலை (Faculty of Medical Sciences and Technology)

  • உயிரித்தொழிநுட்ப்த் துறை (Department of Biotechnology)

9. சமூக அறிவியல்கள் கல்விச்சாலை (Faculty of Social Sciences)

  • பயனுறு பொருளியற் துறை (Department of Applied Economics)
  • மேலாண்மையியற் கல்விக்கூடம் (School of Management Studies) [1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Cusat -overall" (PDF). Archived from the original (PDF) on 2008-12-21. பார்க்கப்பட்ட நாள் 2008-06-23.